Type to search

Headlines

அரசியல் கைதிகளுக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டதா?

Share

கொரோனாவுடன் போராடு கின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடு களைத் தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தலைவர்கள் வெறுமனே கடி தம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதி கள் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் குதிக்கவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராடும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள் சகிதம் அரசியல் கைதிகளது குடும்பத்தவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

குறித்த சந்திப்பிலேயே அவர்கள் இவ் வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நியூ மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறையில் உச்சகட்ட பாதுகாப்பின் மத்தியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளிற்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது தெரியவில்லை.

திட்டமிட்டு அது பரப்பப்பட்டதாவென்ற சந்தேகமும் எம்மிடமுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று அடை யாளம் காணப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் படையினரது கட்டுப்பாட்டின் கீழுள்ள சிகிச்சை நிலையங்களிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சந்தேக த்தை வலுப்படுத்துகின்றது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link