Type to search

Headlines

கொரோனா தொற்றாளர்கள் இரு மடங்காக உயர்வடையும்

Share

கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறை களும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவக் கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாட லொன்று இடம்பெற்றிருந்தது.

இங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இரு வார காலத்திற்கும் மேலதிகமாக தேவையேற்படின் இதே போன்ற நடவடிக் கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறுகையில்,
பொது போக்குவரத்தின் போது சமூக இடைவெளியுடன் பயணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றை முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலணிக்கு தெளிவுபடுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

விசேட வைத்தியர் மகேஷ் ஹரிஸ்சந்திர கருத்து தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் அசௌகரியமின்றி பொதுமக்கள் அத்தியா வசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோரை இனங்காண்பதற் கும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதில், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து ரையாடலில் கலந்து கொண்டிருந்த பேராசிரியர் இந்திக கருணாதிலகவினால் பொது மக்களுக்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதை விடவும் எதிர்காலத்தில் அதிகளவான நிர்வாகம் அத்தியாவசியமாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இம் மாதம் 20ஆம் திகதி வரை இரு வார காலத்திற்கு வைரஸ் தொற்று பரவ லானது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே 14 நாட்களுக்கு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, புலனாய்வுதுறையினர் ஊடாக தேவையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு தொற்று நோயியல் பிரிவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வரையில் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக அத்தியாவசிய தேவைகள் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா வைத் தியசாலையில் மகப்பேற்று பிரிவினை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டி யுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link