இனப்படுகொலையின் அறிகுறியே கோட்டாவின் போர் வெற்றி அறிவிப்பு
Share

எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்புசார் இனப்படுகொலை ஒன்று தமிழர்களுக்கு எதிராக இடம்பெறவுள்ளதற்கான முன் அறிகுறியே கோட்டாவின் போர் வெற்றி நாள் அறிவிப்பு என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந் தேன், ஐ.நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன் னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசு முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ.நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.
இந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப்போகின்றது என்று நினைத் தாரோ என்னவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற போர் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பத்திரிகையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை.
எனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார் ஜனாதிபதி என்று புலப்படுகிறது.
வரப்போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும்.
அவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் பொன்சேகா இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது.
போர் வெற்றிவிழா கொண்டாட் டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரை யோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோஷம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர் காலத்தில் சிக்கி தவிக்கப்போகின் றது என்பதையே காட்டுகின்றது.
இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப் படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப் போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆகவே, முன்னர் போல அல்லா மல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்த வேண்டும்.
இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றுள்ளது.