Type to search

Editorial

1983 ஆடிக் கலவரத்தில் உயிர் நீத்த உறவுகளே!

Share

ஆகாய வெளியில் ஓர் அற்புதமான சஞ்சரிப்பு. சொர்க்கம் என்பது இதுதானோ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

இஃதென்ன ஆச்சரியம். 1983 ஆடிக் கலவரத்தின்போது சிங்களப் பேரினவாதம் கொன் றொழித்தவர்கள் அங்கே வாசம் செய்கிறார்கள்.

37 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். அவர்களைக் கண்ட ஆனந்தத்தில், எப்படி இருக்கிறீர்கள் என்று அவசரமாக கேட்டேன்.

நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். அடக்கு முறை, அடிமைத்தனம், ஆக்கிரமிப்பு, மிலேச் சத்தனம், பஞ்சம் – பசியயன எதுவும் இங்கில்லை. எங்கும் இன்பமயம் இறைமயம் என்றனர் அவர்கள்.

அப்படியா? நாமும் இங்கு தங்க முடியுமா? ஆசையோடு கேட்டேன்.

அவ்வளவுதான் ஏய்! அர்ப்பப்பயலே இது சாதாரணமான இடமா என்ன?

தமிழுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த புனிதர்கள் வாழுகின்ற சுவர்க்கலோகம்.
அங்கே! பார் சாயுச்சியம். அஃது தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக, தமிழ் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் வாழுகின்ற சந்நிதானம். இந்த இடத்தில் உங்க ளுக்கு இடம் ஏது?

அதோ! பார் நரகலோகம். கொதிக்கின்ற எண்ணெய்ச் சட்டியில் கிடந்து துடிக்கின்றதை, அடுத்ததாய் நடக்கிறது பார் எருமைக் கடாக்கள் ஏறி உழக்குவதை. இவர்கள் எல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள்.

பொய் உரைத்தவர்கள். இல்லாதது பொல்லாதது எழுதி தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள மக்களைத் தூண்டி விட்டவர்கள்.

அதற்கும் அப்பால், பாம்புகளும் தேள்களும் புடைசூழ்ந்து கொத்திக் கொத்திக் குதறு கின்றனவே அவர்கள் யார் தெரியுமா?

கிழிந்துபோன மஞ்சள் துணிகளை அடை யாளமாகக் கொண்டு முடிந்தால் கண்டுபிடி.
இதுதான் இங்குள்ள நிலைமை. அங்கே போய்ச் சொல். உண்மையை மறைத்து பொய் எழுதுவோர்க்கு நரகலோகத்தில் தனி இடம் உண்டென்று.

அது சரி தேர்தல் காலத்தில்தான் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஆட்சியாளர்களுக் குப் பதிலடி, அதிரடி, நெற்றியடி, தலையடி கொடுக்கின்றனர். என்ன காரணம்.

அடேய் பயலே! பாராளுமன்றப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்காகத் தாங் கள் பேசியது என்ன என்பதைச் சொல்லச் சொல்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு முண்டு கொடுத்தபோது, விடுவித்த தமிழ் அரசியல் கைதி களின் பெயர்ப்பட்டியலை வெளியிடச் சொல்.

சர்வதேச விசாரணை தேவை என்று எத்தனை தடவை எடுத்துக் கூறினார்கள் என்பதை ஆதாரப்படுத்தச் சொல். இதைவிடுத்து நொந்து போன தமிழினத்தை படுகுழியில் தள்ளுகிறீர்களே! இதுவா உங்கள் தர்மம்.

இப்படியாய் அதட்டல்கள் பீரங்கிக் குண்டுகள் போல் வெடிக்க எடுத்தேன் ஓட்டம். அலறி யடித்தபடி கட்டிலால் வீழ்ந்தேன். கண்டது கனவு என்றறிந்தேன்.

ஆடிக் கலவரத்தில் உயிர் நீத்த உறவுகளே! இன்னும் எங்களுக்கு விடிவில்லை. என்ன செய்வது நாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link