Type to search

Editorial

பேசும் பேச்சினின்றும் மக்கள் மாண்பறிவர்

Share

இப்போதெல்லாம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இணைய வழியினூடாகக் கல்வி கற்கின்றனர்.

கொரோனா அதற்கான சந்தர்ப்பத்தை தந்தது.

ஆசிரியர் கற்பிக்கத் தயாரானார். மாணவர்கள் தத்தம் இணையவழி சாதனங்களின் முன் அமர்ந்தனர்.

நாவடக்கம் பற்றி ஆசிரியர் கற்பிக்கத் தொடங்கினார். எப்போதும் நாம் பண்பாகப் பேச வேண்டும். கதைக்க வேண்டும்.

ஒருவரின் பேச்சும் வார்த்தைப் பிரயோகங்களும் அவரின் குணவியல்பை வெளிப்படுத் தும்.

நல்லவர்கள், நல்ல குணஇயல்பு கொண்டவர்கள் பிறர் மனம் நோகப் பேச மாட்டார்கள். உண்மையை மட்டுமே பேசுவார்கள்.

எனினும் சிலர் கீழ் நிலைப்பட்டு மற்றவர்களை ஏசுவார்கள். பேசுவார்கள். மேடை யேறிப் பேசும்போதும் அவர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

பொய்யுரைப்பது, இல்லாத பொல்லாத கதை களைக் கட்டி விடுவது, பதவி மோகம் கொண்டு பிற சமயங்களையும் சமய நிலை பேணுவோர்களையும் கேவலப்படுத்துவது என எப்படியயல்லாம் இழி சொல் சொல்ல முடியுமோ அந்தளவுக்கு அவர்கள் கீழ் நிலை இறங்குவர்.

இவ்வாறு ஆசிரியர் கூறியபோது, ஒரு மாணவன் சேர்! ஏன் அப்படியயல்லாம் பேசு கிறார்கள் என வினவினான்.

மாணவர்களே! இஃது நல்ல கேள்வி. மற்ற வர்களை இழிவுபடுத்திப் பேசுவதெல்லாம் அவர்களின் அடிப்படைக் குணவியல்பு. இதற்கு மேலாகப் பதவி ஆசை.

ஆனால் ஒன்று… எனக் கூறிய ஆசிரியர் சற்று அமைதியடைய சேர்! ஏதோ சொல்ல வந்தீர்களே என்று மாணவர்கள் கேட்க,

மாணவர்களே! ஒருவர் மற்றவரைப் பற்றி இழிவாகப் பேசினால் பேசியவர் எத்தன்மையர் என்பதை மக்கள் தீர்மானிப்பர். மேடையேறி நின்று மனிதப் பண்பாடின்றி யார் பேசினாலும் அவர் தன்னை இழிவுபடுத்துகிறார் என்றே மக்கள் கருதுவர்.

எனவே எப்போதும் நாம் உண்மை பேச வேண்டும். இனியன கூற வேண்டும். வாதம் செய்வதாயினும் பண்புடைச் சொற்களால் அதனைச் செய்யும்போது, அவர் பண்புடைய வர் என்று மக்கள் கணிப்பர் எனக் கூறிய ஆசிரியர்; யாகாவராயினும் நாகாக்க என்று வள்ளுவன் கூறியதற்குள் நிறைந்த அர்த்தம் உள்ளது.

ஒருவன் எந்த அறத்தைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். இதனையே நாவடக்கம் என்றனர் நம் முன்னோர் எனக் கூறி கற்பித்தலை நிறைவு செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link