கொரோனாச் சோதனையிலும் மாணவர்களின் சாதனை
Share
2020ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அத்தனை மாண வர்களும் பரீட்சைச் சுமையுடன் கொரோனாத் தொற்றுப் பரவுகையால் ஏற்பட்ட கஷ்டமான நிலைமைகளையும் எதிர்கொண்டனர்.
வழமையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடப்பது வழமையாயினும் கொரோனாத் தொற்றுக் காரணமாக குறித்த பரீட்சை ஒக் ரோபர் மாதம் 11ஆம் திகதியே நடைபெற்றது.
ஆக, இரண்டு மாதங்கள் கடந்து பரீட்சை நடைபெற்றதனால் தரம் 5 மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பெற் றோர்களும் கற்றலில் கடுமையாக உழைத் தனர்.
எனினும் மத்திய கல்வி அமைச்சு பரீட் சையை நடத்தி முடிப்பது என எடுத்த தீர்மானம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற் றோர்களுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்திருந்தது.
அதேநேரம் பரீட்சைப் பெறுபேறுகளும் தாமதமின்றி ஒரு மாத காலத்தில் வெளியிடப் பட்டமையும் சிறப்பான நடவடிக்கையாகும்.
இவை ஒருபுறமிருக்க, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் கணிச மான சாதனை படைத்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
அதிலும் குறிப்பாக கிராமப் பாடசாலை மாணவர்கள் பெற்ற பரீட்சைப் பெறுபேறுகள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவில் மிக உன்னதப் பெறுபேறுகளாக இருப்பது பெரும் சாதனை எனலாம்.
இங்குதான் மாணவர்கள், அவர்களுக் குக் கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலைச் சமூகம், மாகாணம், வலயம், கோட்டம் என்ற அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்புடன் கூடிய வகிபங்கின் பெறுமதி உணரப்படுகிறது.
இவ்வுயரிய வகிபங்கை வழங்கிய அனை வரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய வர்கள்.
சுருங்கக்கூறின் உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கும் கொரோனாத் தொற்றின் கோரதாண்டவத்திலும் தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத் தனர் எனில், அதற்கு கல்வி மீது நம்மவர்கள் கொண்ட காத்திரமான பற்றுறுதியே காரணம் எனலாம்.
அதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது இரண்டு மாதங்கள் பிந்தி நடத்தப்பட்டதனால் மாணவர்கள் கற்பதற் கான சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் அதனால் மாணவர்கள் சாதனைமிக்க பெறு பேறுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது என்றும் யாரேனும் கருத்துரைத்தால்; அதனையும் அடியோடு நிராகரிக்க முடியாது.
ஆகவே இனிவரும் காலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் மாதத் தில் நடத்துவது பொருத்தம் என்ற முடிவு எட்டப்பட்டால், காலம் நமக்குக் கற்றுத் தந்த நல்லதொரு பாடம் என்றே கருத வேண்டும்.