யாழ்.பல்கலைக்கழகம் சுமுக நிலைக்கு வர வேண்டும்
Share
நாடு முழுவதும் கொரோனாத் தொற்றினால் உறைந்து போயுள்ளது.
கம்பஹாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று வீரியம்மிக்கதென்ற மருத்துவர்களின் எச் சரிக்கையும் அடுத்து வரும் நாட்கள் மிகப் பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு விடுக்கின்ற அபாய அறிவிப்புகளும் மனதைப் பதற வைக்கிறது.
கட்டுங்கடங்காமல் கொரோனாத் தொற்றுப் பரவினால், என்ன செய்ய முடியும்? யார் காப்பாற்றுவார்கள்? என்ற ஏக்கம் அனைவரையும் பிய்த்துக் கொண்டிருக்க,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவர்களிடையே கைகலப்பு என்பதான செய்திகள் மிகுந்த வேதனையைத் தருகிறது.
நாட்டின் சமகால நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்குக்கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரில்லையா? என்று எண்ணுகின்ற அளவிலேயே எங்கள் நிலைமையுள்ளது.
கலைப்பீட மாணவர்களிடையே முறுகல் என்றால் இல்லை. அந்த முறுகல் நிலையைக் கடந்து; யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், நிர்வாகத்தினர் மீது மாணவர்களில் ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்வு செய்வதைப் பார்க்கும்போது தலைசுற்றுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்ன தான் நடக்கிறது என்று கேட்பதைத் தவிர, வேறு எதுவும் புரியவில்லை.
தமிழர்களுக்கு நிர்வாகம் நடத்தத் தெரியாது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தென்னிலங்கையின் உயர்மட்டம் கடும் பிரசாரம் செய்து வருகிறது.
எதைக் கொடுத்தாலும் தமிழர்கள் போட்டு டைத்து விடுவார்கள். எந்தவித தகவல்களை யும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது எனச் சிங்கள நிர்வாகத் தரப்பு கடுமையான விமர்சனத்தைச் செய்கிறது.
இந்த விமர்சனத்தோடு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங் கப்பட்டால், எல்லாம் கந்தறுந்து காவடி எடுப்பதாக நிலைமை ஆகும் என அவர்கள் வெளிப் படையாகக் கூறுகின்றனர்.
நிலைமை இவ்வாறாக இருக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களிடையே முறுகல் என்பது சமகால சூழலில் முற்றாகத் தவிர்த்திருக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகலை சுமுகப்படுத்த அல்லது கட்டுப்படுத்துகின்ற செயற்பாட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் வெற்றி கண்டிருக்க வேண்டும்.
இந்த நிலைமைகள் இல்லாமல் போய், மாணவர்கள் நிர்வாகத்தையும் – நிர்வாகம் மாணவர்களையும் மாறி மாறிக் குற்றம் சுமத்துகின்ற செயல்கள் அநாகரிகமானவை.
இவையனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தி, ஆசிரியர் – மாணவர் என்ற உயர்ந்த பண்பாட்டு உறவைப் பல்கலைக்கழகம் என்றும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்ச் சமூகத்தின் பேணவா.