வடக்கிற்கான சர்வதேச வர்த்தக கண்காட்சியானது எதிர்வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தில் காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மானகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட ...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று வியாழக்கிழமை (11) காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பு இடம் பெற்றது. குறித்த போராட்டத்திற்கு ...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை (12) முற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி ஜமைக்காவின் ‘சபினா பார்க்’ (Sabina Park) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் ...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, கறுவா அபிவிருத்தி திணைக்களத்தினால் தங்களின் எதிர்கால திட்டங்கள் அடங்கிய வழிகாட்டி வரைபடம் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ...
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் சுவீடன் அரசு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் 7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது ...
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு ...
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) ஒரு பீப்பாய்க்கு ...
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, ...
அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானை கடுமையாக தாக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் அதிக காலம் எடுத்தமையினாலேயே இந்த தாக்குதல்களை நடத்துவதாகவும் ...