பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் ...
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி ...
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 2,712 சிறுவர்கள் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காக 1,025 சிறுவர்கள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ...
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று புதன்கிழமை (08) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் ...
பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ...
அனுராதபுரம் – மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு ...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் ...
இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி, கணினி கட்டமைப்பை சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது ...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ப்ரைட் ரைஸ் கொத்து உள்ளிட்ட உடனடி உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. 20 ரூபாவினால் உணவுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேங்காய் எண்ணெயின் விலை குறைவடைந்ததையிட்டு சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க ...
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய ...