வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்னால் உள்ள வீதிக்குள் காணப்படும் வயலில் இருந்து ஆணொராவரது சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. சடலமாக காணப்படுபவர் யாரென தெரியவராத நிலையில், அவருக்கு அண்ணளவாக 50 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா ...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என ...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் ...
நுவரெலியா கிரகரி வாவியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் படகு ஒன்று நேற்று (19) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாவியில் நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் படகு ஒன்று வேகமாக பயணித்துள்ளது. இந்நிலையில், நீரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அங்கு பயணித்த மற்றுமொரு படகு விபத்துக்குள்ளானது. அதில் ...
புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ...
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ...
கீரிமலை கடலில் நீராடிய ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார். நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் , வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் ...
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். அஹங்கம, கபலான ரயில் கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் விபத்து ...
கொழும்பு – மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, ...
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் இன்று (19) ...