யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் ...
‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக 3 பில்லியன் 87 மில்லியன் 30 ...
எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரால் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை ...
வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் ...
அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் நேற்று முன்தினம் 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், ...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரெலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் ...
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெயை வெல்லவாய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பஸ் நடத்துனர் பொலிஸாரால் ...