ஹொரணை நகரிலுள்ள அரசு வங்கி ஒன்றின் ATM இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 3.05 கோடி ரூபாய் பணம் யாரோ ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் பின் கதவினால் தனது இரு கைகளிலும் இரண்டு ...
ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த படகு ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று (02) புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், பின்னர் அதில் ...
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ...
ரூபாய் 83 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரமுற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 35, 38 மற்றும் ...
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும், அரச பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக சேவை மற்றும் ஆதரவு மையங்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது மையம் நாளை (4) காலை 8.30 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ...
வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விபத்தில் ...
நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் செயற்குழுத் தலைவர் திரு. ரெய்ன் தம்சார் உள்ளிட்ட சிரேஷ்டப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று (02) நீதி அமைச்சகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு. ஹர்ஷனா நனயக்காரவைச் சந்தித்து கலந்துரையாடினர். குழந்தைகள் தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள், காணொளித் ...
மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65% வளர்ச்சியாகும். மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் ...
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் நேற்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ...