யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் பயணிக்கவிருந்த பயணிகளில் இரண்டு இந்திய ...
2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான விபத்துத் ...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னர் நீண்ட ...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஆண்டுதோறும் சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக குவைத்திற்குச் செல்வதாகக் கூறினார். இது, ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களில் சுமார் ...
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை இடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு ...
பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது மடிக்கணினிகள் (Laptops) வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த 13 வெளிநாட்டு விமானப் பயணிகள், இன்று (18) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீன நாட்டு வர்த்தகர்கள் ...
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறாமையினாலும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் ...
9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய கொண்டைக்கடலை கிலோகிராம் ஒன்றின் புதிய விலை 339 ரூபாவாகும் என்பதுடன், இதன் மூலம் நுகர்வோருக்கு 5 ரூபா நிவாரணம் கிடைக்கும். வெள்ளை கெக்குளு அரிசி கிலோகிராம் ...