கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதிலேயே ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு ...
சுகாதாரமான பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பான புதிய வழிகாட்டி இன்று (22) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா விஜேரத்ன இதுகுறித்து தெரிவிக்கையில்; சுகாதார அமைச்சரின் தலைமையில், கொழும்பு மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகக் ...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித ...
சீனாவில் நடைபெற்ற 2026 ஆசிய அஞ்சலோட்ட சேம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்று நேற்று (21) பதிவாகியுள்ளது. 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில், போட்டித்தூரத்தை இலங்கை அணி 38.63 வினாடிகளில் நிறைவு செய்து இந்த புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது. குறித்த அஞ்சலோட்ட அணியில் தினேத் வீரரத்ன, ...
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் ...
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் ...
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத ...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, கடந்த வருடத்துடன் ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மரியாதையின் நிமித்தம் சந்தித்து, சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் ...