இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த கோரிக்கையை ...
ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு ...
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று தயாரிக்கப்பட்ட போலி ...
இதுவரை 200 மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது நான்கு மாவட்டங்களில் 50 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியாக கடமையிலிருந்து தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு ...
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக ...
முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி, சந்தலங்காவ – இரபடகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த டின்மீன் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்று நேற்று (26) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது, அந்தத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் இருப்புக்களைத் தங்களது ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, நேற்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ...
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக ...