யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் வசித்த தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை விடுவிக்கப்பட்டது. தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த மார்ச் ...
ஊரடங்குச் சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ...
முல்லைத்தீவு முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றுக் காலை இந்த விபத்து சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் உழவு இயந்திரத்தை தயார் செய்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த ...
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நடத்தப்பட வேண்டும் ...
நாட்டில் தற்போது பின்பற்றப்படும் சமூக இடைவெளி தொடர்ந்தும் பேணப்படும் அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை விரிவாக்கப்பட்டால் இம்மாத இறுதியில் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதுள்ளதைப் ...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மிகவும் வயது குறைந்ததாக அடையாளம் காணப்பட்ட 4 மாத கைக்குழந்தை குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவரும் வீடு திரும்பினர். புத்தளம், நாத்தாண்டியாவைச் சேர்ந்த 4 மாதக் கைக்குழந்தை உட்பட ஐவர் கொரோனா வைரஸ் ...
தற்போது மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் இதேவிதத்திலேயே முன்னெடுக்கப்பட்டால், எதிர்வரும் 20ஆம் திகதிக்குப்பின் ஊரடங்குச் சட்டத்தை பகுதி பகுதியாக நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அதிக ...
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையிலும் இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,304 பேர் ...
பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் ...
யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வட்டுக்கோட்டையில் தங்கிருந்த நிலையில் அவர்கள் 20 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ...