தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் வரலாற்றில் பேசுபடுபொருளாகி யுள்ளது. ஆம், அரசியலில் காலடி வைத்த கணத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பதவியைத் தனதாக்கிக் கொள்வதை எவரும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அதிலும் கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் விலைபோன பிரகிருதிகள் யார் யாரிடம் பணம் வாங்கிக் கொண்டார்களோ ...
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நடிகர் விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகிறார். அவரின் இந்த வெற்றி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை எனலாம். உண்மை. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ...
பருவ காலம் என்பது நமக்கு கடவுள் தருகின்ற வாழ்வியல் உத்தரவாதம். ஆம், பருவ காலங்கள் இயற்கையின் கொடைக்கான அறிவிப்புகள். அதாவது மனித வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பருவ காலங்கள் நமக்குத் தரு கின்றன. எனினும் அவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக இயற்கை தருகின்ற ...
குற்றங்களுக்கான தண்டனைகள் தனித்து குற்றங்களுக்கானவை மட்டுமல்ல. மாறாக, ஏனையவர்கள் குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் ஆனது. எனினும் நம் நாட்டில் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகக் காலதாமதம் ஆகுவது தான் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. ஆம், குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றுப்படுவதுடன் குற்றங்களை இழைத்தால் ...
தையிட்டி விகாரை தொடர்பில் நீண்டு வரும் சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காண முடிய வில்லை. ஆம், தையிட்டி விகாரை என்பது எமது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. அதேநேரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதற்காக அதனை உடைப்பதென்பதும் ஏற்புடையதன்று. உண்மை. சரி பிழைகளுக்கு அப்பால், ...
மே தினம். உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ் டிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் முதலாளித்துவ வர்க்க்தால் நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உழைத்துக் கொடுக்கின்ற அடிமைகளாக இருந்தனர். ஆம் ஓய்வு இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. நலச்சேசைவகள் ...
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளனை அறியாதவர்கள் இருக்க முடியாது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழகம் வந்திருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து முருகன், ...
தேனிசை செல்லப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி ஈழத் தமிழர்களுக்குத் தாளாத துயரத்தைத் தருவதாகும். ஆம், ஈழத் தமிழ் மக்களை மனம் மெய் மொழிகளால் நேசித்த பெருந்தகை அவர். விடுதலைப் போராட்டக் காலத்தில் எங்கள் ஈழத்துப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு தன் இசையால் உயிர்கொடுத்த தேனிசை செல்லப்பா அதனூடு ...
கற்றவர்கள் கயவர்களாக இருந்தால் இந்த மண் தாங்காது என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோதே இதனை அவர் கூறியிருந்தார். ஆம், கற்றவர்கள் கெடுதியாளர்களாக இருப்பார்களாயின் அவர்கள் கெடுதிகளை – தீங்குகளை – ஈனத்தனங்களை கனகச்சிதமாகச் செய்து முடிப்பர். அவ்வாறு அவர்கள் மிகவும் நுட்பமாக கெடுதிகளைச் ...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை என்ற ஒரு புதிய அமைப்பு களத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்ல விடயம். ஆயினும் “பேரவை” என்ற சொற்பதம் தமிழ் அரசியலில் இருந்து நீக் கப்பட முடியாதது போல தமிழ்ச் சட்டத்தரணி களும் பேரவை என்பதை சேர்த்துக் ...