உன் உயிரை விட வேறு எதுவும் பெறுமதியான செய்தியாகிவிடாது என்பது லண்டன் பி.பி.சியின் தாரக மந்திரம். ஆக, உயிருக்கு நிகராக எதுவும் இருந்து விட முடியாது. எனினும் அந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உலகம் முழுவதையும் கொரோ னாத் தொற்று ஆட்டிப் படைக்கிறது. எனவே கொரோனாத் தொற்றில் இருந்து ...
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 மார்ச் 20ஆம் திகதி அமுலாகிய ஊரடங்குச் சட்டம் காரணமாக மறுநாள் 21ஆம் திகதியிலிருந்து வலம்புரி நாளிதழை அச்சிட முடியவில்லை. உலகம் முழுவதையும் உலுப்பி நிற்கின்ற கொரோனாத் தொற்று இலங்கையிலும் ஏற் பட்டதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டது. ...
கெளரவர்களின் நிட்டூரத்தால் பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யதாயிற்று. 13 ஆண்டுகளில் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமாகும். அஞ்ஞாதவாசம் என்பது எவருக்கும் தெரியாமல் மறைந்திருக்கின்ற காலம். இக்காலத்தில் பாண்டவர்களை யாரேனும் கண்டுவிட்டால், மீண்டும் 12ஆண்டுகள் வன வாசத்தை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. ஆக 12 ...
கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக உலக நாடுகள் இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவு என்பது முக்கிய மானதும் முதன்மையானதுமான நடைமுறை யாக உள்ளது. எனினும் இந்தியா, இலங்கை போன்ற நாடு களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்து வதற்காகப் பொலிஸார் எடுக்கின்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மனிதாபிமானத்துடன் பொலிஸார் நடந்த ...
கொரோனாத் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி அமுல்படுத்தப் பட்ட ஊரடங்குச் சட்டம் ஒரு மாத காலத்தை நெருங்குமளவுக்கு வந்துவிட்டபோதிலும் ஊரடங்கு உத்தரவு இன்னமும் தளர்த்தப்படாமல் உள்ளது. அதிலும் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ள ஆறு மாவட்டங்களில் இடைசுகத்துக் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முன்தினம் 14ஆம் திகதி எட்டுப் பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. எட்டுப் பேர் என்ற எண்ணிக்கை அதிர்ச்சியைத் தரக்கூடியது. குறித்த எட்டுப் பேரும் ஏலவே தனிமைப்படுத்தப்பட்ட வகுதிக்குள் இனங்காணப்பட்டவர்கள் என்பதால் அது தொடர்பில் அச்சப்படாமல் இருக்க முடியும். எனினும் நீண்ட ...
கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக் காட்டு இதிகாசம் என்ற நூலைப் பலரும் படித்திருப்பீர்கள். கவிஞர் வைரமுத்து பிறந்த மண் கள்ளிக்காடு. ஒரு தடவை அங்கு ஏற்பட்ட பெரு வெள்ள அனர்த்தம் கள்ளிக்காடு என்ற அந்தப் சிறு கிராமத்தைக் கபளீகரம் செய்துவிட, கள்ளிக்காட்டு நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் ...
தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய புத்தாண்டில் நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக. எங்கள் பிரார்த்தனை, உலகத்தை உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவும் அமையட்டும். கொரோனாத் தொற்றுக் காரணமாக உலகில் ஏற்பட்டிருக்கின்ற துன்பம் ஒருபுறமிருக்க, அந்த நோயின் கொடூரம் முற்றுப் பெறாவிட்டால், ...
இன்று தமிழ் சிங்களப் புத்தாண்டு. அறுபது ஆண்டுகள் என்ற காலச்சக்கரத்தில் இன்று சார்வரி ஆண்டு பிறக்கிறது. தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்பது தனித்து காலச் சக்கரத்தின் சுழற்சி மட்டுமல்ல. மாறாக புத்தாண்டில் மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து இறை வழிபாடாற்றி தானதர்மம் செய்து தத்தம் தொழில் ...
வைத்தியநாதன் என்று சிவப்பரம்பொருளுக்குச் சூட்டப்பட்ட நாமம். நோய் தீர்க்க வல்ல ஆடவல்லானை வைத்தியநாதன் என்று போற்றிய தமிழ்ச் சமூகம் நோய் தீர்க்கும் மருத்துவர்களை வைத்தியர்கள் என்று அழைத்து இறைவனுக்கு ஒப்பான வர்கள் எனப் போற்றியது. இந்தப் போற்றுதல் வேறு எந்த மொழியிலும் இனத்திலும் காணுதல் அரிது. இப்போது உலகை ...