கொரோனாத் தொற்று உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் உச்சம் பெற்ற நாடுகள் கூட, கொரோனாவுக்கு ஈடு கொடுக்க முடியாத அளவில் திண்டாடிப் போயுள்ளன. இதற்குக் காரணம் கொரோனாத் தொற்றைத் தடுப்பதென்பதற்குள் வாழ்வியல் நடை முறைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியுள்ளன. பொதுவில் மேற்குலக நாடுகள் ஒழுக்கநெறிகளையும் குடும்ப வாழ்வியல் ...
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பெயரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டுச் சூரையங்காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தாரே என்று கூறிய பட்டினத்தடிகள். ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல என்று பட்டியல்படுத்தி, இந்தத் தேசத்திலே யாரும் சதமல்ல நின்றாய் சதம் கச்சியேகம்பனே என்று நிறைவு ...
இந்த உலகம் முழுவதையும் ஆண்ட மகா அலெக்சாண்டர் ஒரு நாள் தன்படைத் தளபதியை அழைக்கின்றார். நாளை என்னுயிர் பிரிந்து விடும். என் உயிரற்ற உடலை மயானத்துக்கு எடுத்துச் செல் லும்போது எனது இரண்டு கைகளும் வெளியில் தெரியக்கூடியதாக எடுத்துச் செல்லுங் கள் என்றார். நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாத ...
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் உங்களோடு பேச முடியவில்லை என்ற கவலை கடந்து, உலகை உலுப்பி நிற்கும் கொரோனாவின் கொடுமையிலிருந்து அனைத்து மக்களும் காப்பாற்றப்படவேண்டும் என இறைவனின் திருவடி தொழுது இம் மடலை எழுதுகிறோம். ஊழிக்காலம் போல உலகம் முழுவதிலும் அவலம் நிரம்பிப் போய் இருக்கிறது. ...