சர்வதேச தினங்கள் என்ற கட்டமைப்புகள் எழுகை பெறுவதற்குச் சாயலாக இருந்தவை சமய நிகழ்வுகளும் தினங்களுமாகும். உலகில் உள்ள அனைத்துச் சமயங்களும் வருடம் முழுமையிலும் தமக்கான தினங் களைப் பிரகடனப்படுத்தி உள்ளன. சுருங்கக் கூறின் சைவ சமயத்தில் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறுவதற்கானது. நாயன்மார்களின் குருபூசை குருவைப் போற்றுவது. ஆடி ...
கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி நிலை உலகம் முழுமைக்கும் பொருந்துமாயினும், அபிவிருத்தியின் உச்சத் தில் இருக்கக்கூடிய நாடுகள் எப்படியும் தங்களின் பொருளாதார தளர்ச்சியை நிவர்த்தி செய்து விடும். ஆனால் இலங்கை போன்ற வறிய நாடுகளால் பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதென்பது ...
“தெளிவு” என்ற தமிழ்ச் சொல்லின் மகி மையை பலரும் உணராதிருப்பது வேதனைக் குரியது. தெளிவு என்பது ஒருவரின் நிதானத்தை, அறிவாற்றலை, விடயப் பொருள் மீது அவரி டம் இருக்கின்ற புலமையைச் சுட்டி நிற்பதாகும். இங்கு பேசுவதில், எழுதுவதில், கருத்துரைப்பதில், அச்சுப்பதிப்புச் செய்வதில் என தெளிவு என்ற உயர் சொல், ...
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் களமிறக்கப்பட்ட படைத்தரப்பின ருக்கு கொரோனாத் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படையினர் களமிறக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் படையினரை ஈடுபடுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கருத்து நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த ...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் வள்ளுவர் கூறிய குறளின் தத்துவம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டி யதாகும். இங்கு யார் யார் வாய்க் கேட்பினும் என்பது எவை எழுகை பெற்றாலும் அதற்கான உண்மைப் பொருளைக் கண்டறிவதே அறிவு ஆகும் எனப் ...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கானதாகும். எனினும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் அமுல்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, சட்ட வரையறைகளுக்குள் உட்படாத ஊரடங்குச் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதிக்குப் பின்னால் நியாயமான ...
கொல்லாமை பற்றி ஒருவர் போதனை செய்து கொண்டிருக்கின்றார். உயிர்களைக் கொல்வது மாபாவம். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் யாரைக் கையயடுத்து வணங்கும் என்று வள்ளுவரிடம் கேட்டால் உயிர்களைக் கொல்லாதவர்களை, புலால் உண்ணாதவர்களை எல்லா உயிர் களும் கையயடுத்து தொழும் என்பார். எனவே நாமும் பிற உயிர்களைக் கொல்லா திருக்க ...
சுவிஸ் போதகரால் யாழ்ப்பாணத்துக்கு பரப்பப்பட்ட கொரோனாத் தொற்றினால் இன்று யாழ்ப்பாண மாவட்டம் நெட்டூரப்பட்டு நிற்கிறது. போதகரின் கூட்டத்துக்குச் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்படும் துன்பத்துக்கு ஆளா யினர். தவிர, போதகரோடு சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற படலம் சில காலம் நீடித்தது. இதில் வேடிக்கைகளும் நடந்தன. தமக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்க நினைத்த ஒரு ...
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கின்றவர்கள், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலாகி இருக்கின்ற வேளை மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சமய சமூக சேவையாளர்கள், தனிநபர்கள் என்போர் போற்றுதலுக்கும் பாராட்டு தலுக்கும் உரியவர்கள். காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தில் ...
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று மார் தட்டிய இனம் நம் தமிழினம். இங்கு தமிழன் என்று சொல்வதற்கும் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யாரேனும் கேட்டால் அதற்குரிய விளக்கத்தைக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழ் என்பது அமிழ்தத்தின் ஊற்று. தமிழ் ...