தமிழ் இனம் தொடர்பில் ஆய்வு செய்த டாக்டர் மு.வரதராசனார் எம் இனத்தின் தாழ்வு நிலைக்குரிய காரணங்களைக் கண்டறிந்தார். போட்டி, பொறாமை, காட்டிக்கொடுப்பு என்பன நம் இனத்தின் பகை வேர்கள் என்பது அவரின் முடிவு. அதாவது தமிழினத்துக்கு எதிரி வெளியில் இல்லை. நம் இனத்துக்குள்ளேயே நமக்கான எதிரி இருக்கின்றான் என்பது ...
முட்டையில் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது உயிர்ப்பைத் தரும். வீட்டுக்குள் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது அஸ்தமனத்தைத் தரும். ஆம், முட்டையின் உயிர்ப்பு என்பது உள் வெடிப்பில் இருந்து வெளிப்படுவது. முட்டைக் குள் இருக்கும் உயிர்தன் முகிழ்ப்புக்காக உள் உடைவை ஏற்படுத்தி ஜனனப்படுகிறது. மாறாக முட்டை வெளியில் இருந்து உடைபடுமாயின் அது ...
அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றான் பாரதி. பாரதியின் இந்த வீர முழக்கம் சுதந்திர வேட்கையின் பாற்பட்டது. அச்சமே அடிமைத்தனத்தின் மூலவேர் என்பதைக் கண்டறிந்த பாரதி அச்சமில்லை என்று நெஞ்சுரம் கொடுத்தான். இங்கு அஞ்சாமை என்பது எவ்வளவு பலமோ அதே ...
கொடிய கொரோனாத் தொற்று ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முடக்கி விட்டுள்ளது. இந்த முடக்கம் எப்போது எடுபடும் என்பது தெரியாத நிலையில் இலங்கையில் கொரோனா நிலைவரம் திருப்தி தருவதாக இல்லை என்றே கூற வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதனைக் கட்டுப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல என்பதை உணர முடிகின்றது. ...
சமயம் என்ற சொல் சமைத்தல் என்ற வினை அடியில் இருந்து உற்பவம் ஆனது. உணவைப் பண்படுத்துவது சமையல். மனிதர்களைப் பண்படுத்துவது சமயம். பண்படாத மனிதர்களால் இந்த உலகம் வதைபடும் – துன்பப்படும். ஈற்றில் பண்படாத வர்கள் படுகுழியில் வீழ்ந்து பாவத்தின் சன்மானத்தை அனுபவிப்பர். எனினும் பாவ பழி பற்றிப் ...
கொடிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து நிற்கிறது. கொரோனா மிகப் பயங்கரமான தொற்று நோய் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. உலகில் கொரோனா மட்டுமே பிரச்சினை என்றிருக்கக்கூடிய மக்களுக்கு அது மட்டுமே இடைஞ்சலாகும். ஆனால் இலங்கைத் தமிழர்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள், ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் (04.05.2020) சந்திப் பொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மகிந்த ராஜபக் விடுத்திருந்தார். இந்தச் சந்திப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கானதல்ல. மாறாக தேர்தலை நடத்துவதற்கானது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்வின் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ...
கொரோனா தொற்றுக்குப் பின்பாக, தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மெளனம் காக் கின்றனர் போல் தெரிகிறது. சற்று ஆற அமர இருந்து எங்கே இவர்கள் என்று நமக்குள் கேள்வி எழுப்பும் போது கால சூழல்களும் நம் அரசியலைத் தீர்மானிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். எது எவ்வாறாயினும் இன்றைய எம் தமிழினத்துக்காக ...
மெய்யியல், வரலாறு, சைவ சித்தாந்தம் என்பவற்றில் புலமைமிக்க பேராசான் ஆ.சபாரட்ணம் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார் என்ற செய்தி தமிழ் அன்னையை துயரமடையச்செய்துள்ளது. சபாரட்ணம் மாஸ்ரர் மிகப் பெரும் அறிஞர். பண்பாட்டு செழுமையின் பற்றாளர். எவர் மீதும் அன்பு காட்டுகின்ற கனவான். அவரின் அறிவாற்றல் பலரையும் அவர் பால் ...
சமூக சேவைகள் திணைக்களத்தால் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுய அபி மான திட்ட ஆய்வில், யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமி மனவிருத்தி பாடசாலை அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை நமக்கெல்லாம் மன நிறைவையும் பெருமையையும் தருவதாகும். செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளை அமைப்பு ...