முன்மாதிரி என்ற தமிழ்ச் சொல் மிகவும் பெறுமதி வாய்ந்தது. எனினும் இன்றைய சமகாலத்தில் முன்மாதிரி என்ற சொற்பதத் துக்காக சுட்டுவிரல்கள் காட்டக்கூடிய எண் ணிக்கை மிகக் குறைவு. அதிலும் தேசத் தலைவர்கள் என்றிருப் போரில் அந்தத் தலைவனைப்பார் அவரின் உயர்ந்த மனிதநேயத்தைப்பார் என்று சொல்வதற்கு யாருளர் என்று ஏங்க ...
வட பகுதியில் கடந்த 20, 21ஆம் திகதிகளில் வீசிய கடும் காற்றினால், ஏகப்பட்ட சேதங்கள் நடந்தாகியுள்ளன. வீசி எறியப்பட்ட வீட்டுக் கூரைகள், முறிந்து விழுந்த மரங்கள், கொட்டி விழுந்த மாங் கனிகள் காய்கள், சரிந்து முறிந்த முருங்கைகள் என்றவாறு சேதங்கள் பலவாகின. அதிலும் வாழைச் செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட சேதம் ...
நாடகம் என்றதும் நாம் நினைப்பது மேடை நாடகத்தையே. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உலகத்தை நாடக மேடையாகவும் மனிதர்களை பாத்திரங்களாகவும் சிவப்பரம்பொ ருளை நாடகத்தின் இயக்குநராகவும் அடையாளப்படுத்துவார். அவன் இயக்குகிறான். நாங்கள் நடிக்கின்றோம். அந்தந்தப் பாத்திரங்கள் தாம் தாம் கொண்டு வந்த கன்மவினைப் பயனுக்கு அமைய நடிக்கின்றனர். கதை, வசனம் ...
நாட்டை அபிவிருத்தி செய்வதையோ அன்றி நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்துவதையோ இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் செய்திலர். இதற்குச் சமகால ஆட்சித் தரப்பும் விதி விலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு நாட்டின் அபிவிருத்தியோ மக்களின் வாழ்வாதாரமோ பிரச்சினையன்று. ...
கொடிய கொரோனா தொற்றினால் உலகம் முழுமைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு சொல்லி மாளா. பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அத்தனை துறைகளிலும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று மனிதர்களை உடல், உள, சமூக, ஆன்மிக நிலைகளில் பாதிக்கச் செய்துள்ளது. அதாவது உலக சுகாதார ஸ்தாபனம் சுகம் என்பதற்குக் கூறிய ...
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தை தேய்க்கும் படை என்றார் வள்ளுவர். வள்ளுவர் தந்த குறளறம் இன்று உலகம் முழுமைக்கும் செல்லுபடியாகி உள்ளது. விஞ்ஞானம், அறிவியல், அணுவாயுதம், விண்வெளி ஆய்வுகள், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய விதப்புரைகள் என அகிலத்தை ஆராய்ந்த நாடுகள் இப்போது சுதந்திரமாய் சுவாசிக்க முடியாதவாறு முகக்கவசம் அணிந்து ...
கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள். அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் ...
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மகிந்த ராஜபக்வைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை சமர்ப்பித்தனர். அதேசமயம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை பிரதமரிடம் சமர்ப்பித் தார். தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரம் அடங்கிய ...
அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. ...
இராம – இராவண யுத்தம் நடக்கிறது. கும்பகர்ணன் இந்திரசித்து எனப் பெரும் போர் வீரர்கள் மாண்டு போயினர். போர்க்களத்தில் அத்தனை ஆயுதங்களையும் இழந்த இராணவன் வெறுங்கையோடு நிற்கிறான். நிராயுதபாணியுடன் போர் தொடுப்பது அறமல்ல என்பதால் இன்று போய் போர்க்கு நாளை வா என்கிறார் இராமர். உடன் பிறந்த சகோதரன், ...