நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் போது, மக்களை ஏமாற்றுகின்ற உபாயங்கள் மிக உச்சமாக இடம்பெறலாம். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவில் வாக்களிப்புக்கு முதல் நாள் அல்லது வாக்களிப்புத் தினத்தின் போது தமிழ் மக்கள் நம்பும் வகையில் வேண்டுமென்றே சில விடயங்களை வெளிப்படுத்தி, அதன்மூலம் வாக்குகளைத் தம் ...
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாகும் என்று தவத்திரு யோகர் சுவாமிகளிடம் கேட்ட போது, அவர் கண்ணீர் விட்டு அழுததான சம்பவத்தை நம் முன்னவர்கள் சொல்லக் கேட்டுள்ளோம். இதுபோல தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் அவர்கள் கூறியது பலருக்கும் தெரிந்த விடயமே. ஆக, ஈழத் தமிழினத்தின் ...
அன்புக்குரிய அரச சேவையாளர்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கம். இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகிறது. அரச பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, அவர் கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூல வாக்களிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவில் தபால் மூல வாக்களிப்பு என்பது புதுமனைப் புகுவிழாவின் போது ...
ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுவதே பொதுத் தேர்தலாகும். தேர்தல் வகைமைகள் வித்தியாசப்பட்டாலும் பொதுத் தேர்தல் என்பதே பாராளுமன்ற ஆட்சிக்கான வித்திடல். அந்த வகையில் இலங்கையின் பாராளுமன்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. கெடு காலம்போல, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட கையோடு கொரோனாத் தொற்று உலகை ...
இந்திய தேசத்தில் கொரோனாத் தொற்று நோய் உருத்திர தாண்டவம் ஆடுவது கண்டு மனம் நொந்து போயுள்ளோம். இந்திய தேசத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்றில் இருந்து பாரத மக் களைக் காப்பாற்ற வேண்டுமென நாம் அனைவரும் ஆன்மிக தியானம் செய்ய வேண்டும். இவை ஒருபுறமிருக்க, அகண்ட இந்திய தேசம் ...
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கொரோனாத் தொற்றுக் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அறவே இல்லாத நிலை யில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வும் மறந்து போன விடயமாகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் இன்னும் தீரவில்லை. ...
ஜனநாயகம் என்பது தேர்தல் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் நடைபெறும் தேர்தலின்போது பொதுமக்கள் வழங்குகின்ற வாக்குகளின் அடிப்படையில் அரசாங்கம் அமைகிறது. ஆக, பொதுமக்கள் வழங்குகின்ற ஆணை என்பதை தேர்தலின்போது அவர்கள் அளிக் கின்ற வாக்குகளே தீர்மானிக்கின்றன. எனவே ஒரு நாட்டில் உச்சமான ஜனநாயகம் ...
கோயில் மணியோசைதனைக் கேட்டதாரோ இங்கு வந்ததாரோ என்ற சினிமாப் பாடல் அந்தக் காலத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. பழைய திரைப்படப் பாடல்களின் இசையும் இனிமையும் இன்றும் நெருட வைக்கும். அந்தளவுக்கு அந்தக் காலத்துச் சினிமாப் பாடல்கள் கருத்தாழம் மிக்கதாய் தத்துவத்தை கூறுவதாய் அமைந்தன. இவை ஒருபுறமிருக்க, கோயிலுக்கு மட்டும் மணியோசை ...
எம் மலையகத் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பினால் நீங்கள் அடைந்துள்ள சொல் லொணாத் துயர் கண்டு நாமும் மிகுந்த வேதனை அடைகிறோம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உச்சிக் கதிரவன் நடுவானில் இருந்து வீழ்ந்தது போல் குறைந்த வயதில் திடீரென மரணித்தமை உங்களுக்கு மிகுந்த ...
வடமாகாணத்தில் இயங்கக்கூடிய அநேகமான வங்கிகள் குறைந்த வட்டிக் கடன்களை மறைப்புச் செய்கின்ற மிக மோசமான செயலைச் செய்வதாக புத்திஜீவிகளும் சமூக நலன் மீது அக்கறை கொண்டவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். பொதுவில் வட மாகாணத்தில் இயங்குகின்ற அநேகமான வங்கிகள் தென்பகுதியில் உள்ள தலைமைகளுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் அதனூடாகப் பதவி ...