இப்போதெல்லாம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இணைய வழியினூடாகக் கல்வி கற்கின்றனர். கொரோனா அதற்கான சந்தர்ப்பத்தை தந்தது. ஆசிரியர் கற்பிக்கத் தயாரானார். மாணவர்கள் தத்தம் இணையவழி சாதனங்களின் முன் அமர்ந்தனர். நாவடக்கம் பற்றி ஆசிரியர் கற்பிக்கத் தொடங்கினார். எப்போதும் நாம் பண்பாகப் பேச வேண்டும். கதைக்க வேண்டும். ஒருவரின் பேச்சும் ...
மன்னன் சாலமனின் சபைக்கு ஒரு விசித் திரமான வழக்கு வருகிறது. இரண்டு தாய். ஒரு குழந்தை. இருவரும் குழந்தை தமது என வாதிக்கின்றனர். அவர்களின் வாதம் மன்னன் சாலமனைக் குழப்புகிறது. ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் இருக்க முடியும். இரண்டு தாய்க்கு ஒரு குழந்தை எப்படிச் சாத்தியமாகும். மன்னன் ...
அன்புக்குரிய தமிழ் மக்களே! எங்கள் தமிழ் அரசியல் படும் பாட்டை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இல்லாதது பொல்லாதது என அடிப்படை மனச்சாட்சியின்றி தேர்தல் பிரசாரங்கள் நடந்தா கின்றன. இவைபற்றி நீங்கள் அறியாதவர்கள் அல்ல. எனினும் ஓர் உண்மையை இங்கு நாம் கூறி யாக வேண்டும். 1330 குறட்பாக்களைத் தந்த ...
பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. பொதுவில் தேர்தல்கள் நியாயமாகவும் நீதியாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் கட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு – உரிய விருப்பு வாக்குகள் கணிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில், ...
ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்நேரம் மட்டத்தேள் ஒன்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ணுற்ற பரமஹம்சர் தனது கைகளை நீட்டி அந்த மட்டத்தேளைத் தூக்கி னார். அவ்வளவுதான் தேள் அவரின் கையில் கொட்டியது. தேள் கொட்டியதும் தன் கையை உதறினார் பரமஹம்சர். மீண்டும் ...
தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் வன்மம் இன்னமும் தீர்ந்த பாடில்லை வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழினத்தை வதைத்து சங்காரம் செய்தும் அவர்களின் பகைமை அடங்கவில்லை எனும்போது, தமிழினத்தின் எதிர்காலம் இன்னும் ஆபத்தாகவே இருக்கப் போகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேலாக, ...
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற இத்தேர்தலுக்காக செல விடப்படும் தொகையும் மனித உழைப்பும் கொஞ்சமல்ல. தவிர, தேர்தலில் போட்டியிடுகின்றவர் களும் தமது வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபடுகின்றனர். தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் ஏராளம். இருந்தும் தவிர்க்க ...
நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு இன்று கொடியேற்றம். நல்லூர் முருகனின் திருவிழா என்பது தமிழ் மக்களின் பெருவிழா. சமய பேதமின்றி அனைத்து மக்களும் பங்கேற்கின்ற நல்லூர்க் கந்தனின் திருவிழாவுக்குச் சென்று வந்தாலே அது பெரும் பேறு என்று கருதுபவர்கள் நாம். இதற்கு மேலாக, அலங்காரக் கந்தனைக் கண்டால் போதும். அதுவே ...
தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு இன்று தனது இயல்பை இழந்து நிற்கிறது. ஒரு காலத்தில் இருந்த தொழிற்சங்கங்கள் நடுவுநிலை நின்று தமது தொழிலாளர்களின் – பணியாளர்களின் – சேவையாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தன. அதேநேரம் அரசியல் கட்சிகளும் தத்தம் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களை அமைத் திருந்தன. இவ்வாறு அரசியல் ...
ஆகாய வெளியில் ஓர் அற்புதமான சஞ்சரிப்பு. சொர்க்கம் என்பது இதுதானோ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். இஃதென்ன ஆச்சரியம். 1983 ஆடிக் கலவரத்தின்போது சிங்களப் பேரினவாதம் கொன் றொழித்தவர்கள் அங்கே வாசம் செய்கிறார்கள். 37 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். அவர்களைக் கண்ட ஆனந்தத்தில், எப்படி இருக்கிறீர்கள் ...