புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கொரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர் வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் ...
கொழும்பு முழுவதையும் முடக்க உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் கொழும் பில் வசிப்பதனால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாயினால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குமுழமுனை பகுதியை சேர்ந்த இராசலிங்கம் ரமேஷ் (வயது-26) என்ற இளைஞனே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. பக்கத்து வீட்டு நாயொன்று குறித்த இளைஞன் வீட்டிற்குள் ...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தல் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய வருக்கு 10 நாட்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த அனுமதி தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1500 ...
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் மீசாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்ப வரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான 5ஆவது உயிரிழப்பு இதுவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா ...
பிரேசிலிலுள்ள அமேசன் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டில் இதுவரை ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்றிரவு ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யாழ்.அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மத ஆராதனையில் ...