மாரடைப்பால் 23 வயது இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் கரவெட்டி மத்தொணி பகுதி யைச் சேர்ந்த 23 வயதுடைய அருந்தவராசா சோபிகா என்பவரே உயிரிழந்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக ...
நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவது பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். எனினும் கொரோனாத் தொற்றுக் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாத் தொற்றில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து ...
யாழ்.மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி யாழ். மாவட்டத்தில் 18 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். மாவட்டத்தில் சிறைச்சாலையில் 9 ...
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் ...
யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று முன் தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
இலங்கையில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஓயாத அலையாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மேலும் ஆயிரத்து 914 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ...
நாடளாவிய ரதியில் பாடசாலைகள், முன்பள்ளி,மேலதிக வகுப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன், அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபருடைய சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவ்வாறு ...
கொரோனாத் தொற்றில் இருந்து தானும் மற்றவர்களும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு முகக் கவசம் அணிவது இலங்கையில் சட்ட வலுவுடையதாக ஆக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவது என்ற விடயம் விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுமையிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தும் ...
நாட்டில் புதிதாக பரவிவரும் திரிபடைந்த கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தேக ஆரோக்கியத்துடன் இருந்த 6 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 23(ஆண்), 26 ...