மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் அந்த வீதியில் வாகன போக்குவரத்து இயலாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுநர்களும் பொதுமக்களும் மாற்று வழிகளை ...
274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும். ...
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார். “எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக ...
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளது. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது. அத்துடன், தற்போது ...
விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள், கத்தோலிக்க மதக் கல்விக்கான ஆசிரியர் பணிக்குழாம் ...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன், விமான நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இதனால், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ...
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று (21) கடற்படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதியை, மேற்கு ...
பதுளை – வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் 10 மாணவர்களும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் 18 மாணவர்களும் என மொத்தம் 28 மாணவர்கள் சிகிச்சை ...
மத்திய கிழக்கு போரின் போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மரணதண்டனைகளின் சமீபத்திய நிகழ்வாக, ஆயுதமேந்திய கிளர்ச்சி மற்றும் “பிரிவினைவாத பயங்கரவாத குழுக்களில்” உறுப்பினர்களாக இருந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பேருக்கு ஈரான் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் தொடங்கியதில் இருந்து, ...
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் நேற்று ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 6 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் ...