வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை மறுதினம் ஆரம்பமாகும் குறித்த விஜயம் ஜூன் 3ம் திகதி நிறைவடையவுள்ளது. குறித்த நாடுகளின் அழைப்பிற்கிணங்க அமைச்சர் விஜித ஹேரத் அங்கு பயணிக்கவுள்ளார். குறித்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் அமைச்சர்கள் உட்பட பல குழுக்களின் ...
லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் கார் விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட் என பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நபர், இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது பாதுகாப்புத் தரப்பினரால் ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ...
தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று ...
பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனுராதபுரம் – நாச்சதூவ குடியேற்றப் பகுதியை இவ்வாறு பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த ...
இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று (23) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் நேற்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 6 மாவட்டங்களில் உள்ள 34 ...
வட மாகாணத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வொன்றிற்கு சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் சென்ற இந்த நபர்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது ...
வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள்விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா, நேற்று (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...