Type to search

Articles

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு. பகுதி – 01

Share

ஓர் ஊரில் அநியாயங்களும் அட்டூழியங்களும் தலைவிரித் தாடுகின்றன. நிலைமையைப் பொறுக்க முடியாத கடவுள் தன் தூதுவர்களை அந்த ஊருக்கு அனுப்பி, அங்கிருக் கின்றவர்களைக் கொன்றொழிக்குமாறு கட்டளையிடுகின்றார்.

கடவுளின் கட்டளைப்படி தூதர்கள் அந்த ஊருக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு வழி பாட்டுத்தலம். அங்கு ஒரு பெரியவர் கடவுளைத் தொழுதபடியே இருக்கின்றார். அவரைப் பார்த்த தூதர்கள் அதிர்ந்து போயினர்.

இவரை எப்படிக் கொல்வது. கடவுள் தவறுதலாகக் கூறி விட்டார் போலும் என்று நினைத்த தூதர்கள், மீண்டும் கடவுளிடம் சென்று; சுவாமி உங்கள் கட்டளைப்படி அந்த ஊருக்குச் சென்றோம். அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் உங்களைத் தொழுதபடி ஒரு பெரியவர் இருக்கிறார். அவரையும் கொல்வதா? எனக் கேட்டனர். அதற்கு அவரைத்தான் முதலில் கொல்லுங்கள் என்றார் கடவுள்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன தூதர்கள் ஏன்? சுவாமி என்றனர்.

அதற்குக் கடவுள் சொன்னார்; அந்த ஊரில் அநியாயம் நடக்கிறது, அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. எனினும் அது கண்டு எந்தக் கவலையும் இல்லாமல் என்னைத் தொழுவதிலேயே அந்தப் பெரியவர் காலத்தைக் கடத்துகிறார்.

அது ஒரு பொறுப்பற்ற செயல். அநீதி நடக்கும் போது, அட்டூழியம் தலைவிரித்தாடும் போது அதனைத்தடுத்து நிறுத்த முற்பட வேண்டும். அதுவே என் விருப்பத்திற்குரியது என்றார் கடவுள்.

ஆக, பொய்யும் புரட்டும் மேலெழுந்து ஆடுகையில் அது கண்டு மெளனமாக இருப்பது தெய்வவிரோதம் என்ற தர்மத்தின் அடிப்படையிலேயே இத்தொடர் எழுதப்படுகிறது.

இத்தொடரின் நோக்கம் எவரையும் புண்படுத்துவதன்று. அல்லது யாரையும் தூக்கித் தோளில் ஏற்றுவதுமன்று. மாறாக உண்மையைக் கூற வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

மகாபாரதப் போரில் முதலில் மரணித்தவர் பீஷ்மர். பிதாமகர் என்று போற்றப்படும் பீஷ்மர் தனக்குக் கிடைக்க வேண்டிய ஆட்சி அதிகாரங்களை விட்டுக் கொடுத்த ஒரு மகாஞானி. அப்படியிருந்தும் அவர் மீது அம்புகள் துளைத்தன என்றால்- போர்க் களத்தில் முட்படுக்கையில் துன்புற்றுக்கிடந்தார் என்றால் அதற்குக் காரணம் உண்டு.

ஆம்,பாஞ்சாலியின் துகிலைக் களைகின்ற கயமைத்தனத்தை கெளரவர் தரப்புச் செய்கின்ற போது அது கண்டு பீஷ்மர் பேசா திருந்த பெரும் பிழையே அவரை நிலத்திடை வீழ்த்தியது.

ஆக, பேசவேண்டியதைப் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். காலம் கடந்து பேசு வது காலம் போக்குவதற்கு உதவு மேயன்றி, பிழையைத் திருத்தப் போவதில்லை.

எனவேதான் நல்லவர்க்கெல் லாம் சாட்சிகள் உண்டு என்ற இத்தொடர் உதயமாகிறது.
இத்தொடரின் அடிப்படை நியாயத்தை, இதற்குள் இருக்கக்கூடிய நீதித்துவத்தை ஆய் ந்து தீர்ப்பு வழங்கும் பெரும் பொறுப்பு வாசகர்களாகிய உங்களிடமே உண்டு.

இது பற்றி நீங்கள் எடுக்கின்ற எந்த முடிவுக்கும் நாம் உடன்பட்டவர்கள் என்பதை இங்கு நாம் உறுதிப்படுத்துகின்றோம்.

தவிர, இங்கு நாம் கூறுகின்ற விடயங்களைப் பொது நோக்கில் நின்று பார்க்க வேண் டும் என்பதுதான் உங்களிடம் நாம் முன்வைக்கும் விநயமான வேண்டுதல்.

மீண்டும் ஒருமுறை; இத் தொடர் தமிழினத்தின் நலன் பொருட்டு எழுதப்படுகிறது. எவர் மனதையும் கீறல்படுத்துவ தற்கல்ல என்பதை வலியுறுத்துகின்றோம்.

அன்புக்குரிய தமிழ் உறவு களே! இன்றுவரை எங்கள் இனம் விடியா இருளில் மூழ் கிக் கிடக்கிறது. எங்கள் இனத் திற்கு விடிவும் விடுதலையும் கிடைக்க வேண்டுமென்று உளமார நினைக்கின்றவர்கள் ஏராளம்.

அதேநேரம் இருளை இருள் என உணராமல் ஒளியைக் குறைகூறுகின்றவர்களும் இருக் கவே செய்வர். இந்த உலகம் இதற்குரியதுதான். இல்லை யயன்றால், எதிர்ப்பதம் என்ப தற்கு ஏது இடம்.

காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதிலும் பட்டதுன்பம் கொஞ்சமன்று. அவரின் மரணம் கூட துப்பாக்கி ரவைகளின் துளைப்பினூடாகவே நடந்தாயிற்று.

ஆனாலும் காந்திமகானை பாரத தேசத்து மக்கள் ஆதரித்தனர். அவரைத் தங்களின் தேச பிதாவாக ஏற்றுக் கொண்டனர். அந்த அங்கீகாரமே காந்தியடிகளை அகிம்சாமூர்த் தியாக இந்த உலகம் அங்கீகரித்தது.

அதேநேரம் காந்தியைக் கொன்ற கோட்சே என்ற கொடியவனுக்கும் உடந்தை யாய் இருந்தவர்களும் உளர். நாம் காந்தியைப் போற்றினால் அவர்கள் கோட்சேயைப் போற் றுவார்கள். இஃது தவிர்க்க முடியாத நியதி.

இந்த நியதி இருப்பதா லேயே பகலும் இரவும்- நிழலும் வெயிலும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இங்கு தான் ஒரு முடிவுக்கு நாம் வரக் கூடியதாக உள்ளது. அதாவது ஒரு தலைவனின் உருவாக்கம் என்பது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. தூய்மை யான சிந்தனையும் மாண்புடைய மனிதநேயமுடையோரும் சேர்ந்து அடையாளம் காட்டு கின்ற தலைவனால் மட்டுமே சோதனைகளைத் தாண்டி சாதனை படைக்க முடியும். இஃது வெறும் கற்பனையன்று. இதுவே நிஜம்.

உலக வரலாற்றில் விடுதலை பெற்ற அத்தனை மக்கள் சமூகத்திலும் நாம் சுட்டிக் காட்டக்கூடிய உதாரணங்கள் பலவுண்டு.

பாரத தேசத்திற்கு விடு தலை பெற்றுத்தந்த காந்தியடிகள் முதல் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா வரை மக்கள் தமக்காகப் படைத் தருளிய தலைவர்கள்தாம்.

என்னசெய்வது, நம் தவக்குறைவு போலும். தமிழீழ விடு தலைப்புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்குப் பின்பு ஒரு நல்ல தலைவனை நம் ஈழத்தமிழ்த் தாயால் தந்து விடமுடியவில்லை. அதன் விளைவுகள்தான் எம் இனத்தின் இன்றைய அந்தரிப்புகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link