நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு. பகுதி – 02
Share
(நேற்றைய தொடர்ச்சி)
2009 மே 18 இற்கு முன்பான வன்னி யுத்தம் எங்கள் இனத்தைக் கருவறுத்தது.
விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் வலிமை காரணமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இருந்த சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் அதில் இருந்து விடுபட்டுக் கொண்டனர்.
அதன் முடிவு, இனித் தமிழர் களுக்கு எதுவும் கொடுப்பதில்லை என்பதாக இருந்தது.
உண்மையில் இப்படியயாரு விடுதலைப் போராட்டத்தை உலகிலுள்ள எந்த இனமக்கள் முன்னெடுத்து, அவர்களின் விடுதலைப் போராட்டம் முறி யடிக்கப்பட்டிருந்தாலும் அதன் தொடர்ச்சி அந்த மக்களின் பிரச் சினைக்கு உடனடியாகத் தீர்வை முன்வை என்பதாக சர்வதேச அழுத்தம் இருந்திருக்கும். அந்த அழுத்தம் அமுலாகியும் இருக்கும்.
ஆனால் எங்கள் தமிழினத் திற்கு மட்டும்தான் யுத்த அழிவிற்குப் பின்பும் எதுவும் கிடைக்காமல் போயிற்று. இதுமட்டுமல்ல, யுத்தத்திற்குப் பின்புகூட தமிழினத்தை அடிமைப்படுத்தவும் அதட்டவும் பயப்பீதியுடனேயே தமிழர்கள் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற நினைப்போடும் சிங்கள ஆட்சிப் பீடமும் பெளத்த பீடமும் செயலாற் றுகின்றன.
இதற்கெல்லாம் காரணம் என்ன? என்ற கேள்வி எங்களுக்குள் பல தடவைகள் எழுந் திருக்கும். இங்குதான் எம் தமிழினம் தலைவன் அற்ற ஓர் இனமாக இருக்கிறது என்ற அடிப் படை உண்மை தெரியவருகிறது.
ஆம், 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழினம் தனது ஆயுத பல த்தை- போராட்ட பலத்தை மட்டும் இழக்கவில்லை. மாறாக தனக்கான தலைமையையும் தமிழினம் இழந்துவிட்டது.
முப்பது ஆண்டுகாலப் போரா ட்டம். அந்தப் போராட்டத்திற்குப் பின்னால் அணிதிரண்ட மக்கள் சமூகம் இதற்கு மேலாக சர்வதேசத்தின் பார்வையைத் தன்வசப்படுத்திய தியாகம், அர்ப்பணிப்பு, கட்டமைப்பு என்ற அனைத்தையும் கொண்டிருந்த எம்மால்; எம் இனத்தின் அவலத்தை உணர்ந்தேற்கும் ஒரு நேர்மையான தலைமையை உருவாக்க முடியாமல் போய் விட்டது. இதன்விளைவுதான் இன்றைய அத்தனை நிட்டூரத் திற்கும் மூலகாரணம் ஆகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையை ஏற்கட்டும் என்ற ஆணையை வாக்குகள் மூலம் தமிழ்மக்கள் வழங்கினர்.
ஆனால் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு செம்மை யாகச் செய்யவில்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தனது கட்சிக்குள் ஒரு சர்வாதிகாரத் தலை வராகச் செயற்பட்டார். அவரின் இயங்கு நிலைக்கு அதி உச்சமாக உதவக்கூடிய ஒரு சிலருடன் தனது அரசியல் பணியைச் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மிகுந்த ஆசை கொண்டார். அதற்காக தமிழி னத்திற்குச் சாதகமாகக் கிடைத்த சர்வதேச வாய்ப்புக்களை விட்டுக் கொடுத்தார்.
எனினும் நீங்கள் செய்வது பிழை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் எடுத்துக்கூறக்கூடிய திராணி அங்கிருந்த எவரிடமும் இருந் திருக்கவில்லை.
இரா. சம்பந்தரோடு பகை த்துக் கொண்டால், தங்களின் அரசியல் எதிர்காலம் அஸ்த மனமாகிவிடும் என்ற பயம் மட்டுமே கூட்டமைப்பில் இரு ந்த அரசியல்வாதிகளிடம் குடிகொண்டிருந்தது.
இவ்வாறு தமிழ்மக்கள் தமக்கான தலைமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிடம் ஒப்படைத்த பின்னர் வெறும் நம்பிக்கையைத் தவிர, கூட்டமைப்பிடம் கேள்வி கேட்கின்ற மக்கள் அமைப்புக்களும் இருந்திருக்கவில்லை.
இதனால் தாம் செய்வது அத் தனையும் சரி என்பது போன்ற பிரமை கூட்டமைப்பின் தலை மையிடம் ஏற்பட, எல்லாம் அம்போ என்றாயிற்று.
இப்போது தமிழ்மக்கள் சிங் களப் பேரினவாதத்திற்கு எதி ராகப் பேசுவதைவிட, அவர் களை எதிர்ப்பதைவிட தமிழ் அரசியல் தரப்புக்கு எதிராகப் பேசுவதிலும் எழுதுவதிலுமே முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.
ஒன்றாக ஒருமைப்பட்டு தமிழினத்தின் விடிவுக்குப் பாடுபடுவார்கள் என்று நாம் யாரை நம்பினோமோ அவர்கள் இன்று தங்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதை நாம் வெளிப் படையாகக் காணமுடிகின்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அனுபவம் நிறை ந்த மூத்த அரசியல்வாதி, துறை சார் புலமைமிக்கவர். எனினும் விடுதலைப்புலிகள் தொடர் பில் அவரிடம் எதிர்ச்சிந்த னையே இருந்தது.
விடுதலைப்புலிகளுடன் சமாளித்துச் செல்லுதல் என்ற மனநிலை சம்பந்தரிடம் இரு ந்ததேயன்றி, விடுதலைப் புலிகள் மீது உண்மையான விசுவாசம் அவரிடம் அறவே இருக்கவில்லை.
இந்த வெறுப்புநிலை இலங்கை ஆட்சியாளர்களுடன் இணங்கிச் செல்வதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை என்ற முடிவுக்கு அவரை ஆட்படுத்தியது.
விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிந்துவிட்டது. இனியும் நாம் அரசாங்கத்தை எதி ர்க்கக்கூடாது. அவர்களுடன் இணங்கிச் சென்று அவர்களிடம் இருந்து ஏதேனும் பெற் றுக்கொள்ளலாம் என்பதே சம்பந்தரின் நம்பிக்கையாக இருந்தது.
அவரின் இந்த நம்பி க்கை தமிழ் மக்களுக்குச் சாத கமாக இருந்த சர்வதேச ஆதரவை மறைத்தது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் பெறுமதியை உணராமல் செய்தது.
இதன் காரணமாகவே ஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கருத்துரை க்குமளவிற்கு சம்பந்தர் பொரு த்தமற்ற பாதையில் பயணிக்கத் தொடங்கினார். \
ஆனால், சமகாலத்தில் ஆட்சியாளர்களுடன் இணங்கிச் சென்று எங்களின் உரி மையைப் பெறலாம் என்ற சம்பந்தரின் நம்பிக்கைகள் தகர்ந்து போயின.
இப்போது தமிழ்மக்கள் அவரிடம் கேள்வி கேட்கின்றனர். மக்களின் நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல் தலை குனிகின்ற நிலையிலேயே அவரின் அரசியல் முதிர்ச்சியும் முற்றும் உள்ளது.Paragraph
இங்கு அவரின் தலைகுனிவு பெரிதன்று. மாறாக தமிழினத்திற்கு இருந்த சர்வதேச சாத கச் சூழமைவு எட்டப்போய் விட்டது என்பதுதான் மிகப் பெரும் துரதிர்ஷ்டமாகும்.