Type to search

Headlines Local News News

வயல் காவலுக்கு சென்ற இளைஞர் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலி!

Share

முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த  இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல் பகுதிக்கு நேற்றையதினம் (22) இரவு சென்றுள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link