Type to search

Headlines Local News News

யாழில் லொறி மோதி ஸ்தலத்திலேயே பலியான இளைஞன்

Share

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

பண்ணைப் பகுதியில் வாகனப் பயிற்சியை முடித்துக்கொண்டு, அவர் வாகனத்திலிருந்து வீதியில் இறங்கிய போது, பின்னால் வந்த லொறி ஒன்று மோதியதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link