Type to search

Editorial

வடக்கு மக்களை ஏமாற்றிய சூரியக்கல மின் உற்பத்தி

Share

சூரியக்கல மின் உற்பத்தி தொடர்பான விளம்பரப் பதாகைகள் வடக்கிலுள்ள அத்தனை மின்சார சபை அத்தியட்சகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

ஆரம்பகட்டங்களில் சோலர் பயன்பாடு பற்றிய புரிதல் இன்மையால் அது வியத்தில் அவசரப்படாத நம் வடமாகாண மக்கள் பின்னர் சூரியக்கல மின் உற்பத்தியில் நாட்டம் கொண்டனர்.

இதில் இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள் தங்களின் வீடுகளுக்கு பொருத்தியதன் காரணமாகவும் சோலர் விடயத்தில் நம் மக்கள் ஆர்வம் கொண்டனர்.

எனினும் அதிர்ஷ்டவசம் போல ஒரு பகுதியினர் சூரியக் கலங்களை தங்கள் வீடுகளி லும் நிறுவனங்களிலும் பொருத்திய போதிலும் ஏனையவர்கள் சூரியகல மின் உற்பத்திக்கான விண்ணப்பங்களை வழங்கியிருந்தும் போதிய மின்மாற்றிகள் இன்மையால் அல்லது வடக்கில் இருக்கக்கூடிய மின் மாற்றிகளின் கொள்ளளவு போதாமையால், சூரியக்கல மின் உற்பத்திக்கான அனுமதியை தரமுடியவில்லை என்பதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண நிர்வாகம் அறிவித்திருந்தது.

எனினும் அது தொடர்பான விளக்கங்கள், தெளிவுபடுத்தல்களை ஊடகங்கள் வாயிலாக வடமாகாண நிர்வாகம் செய்திருக்க வேண்டுமாயினும் அதைச் செய்வதில் அவர்கள் கருசனை கொள்ளவில்லையோ அன்றி அவ்வாறானதொரு தேவை இல்லை எனக் கருதினரோ தெரியவில்லை.

இதன் காரணமாக “சோலர்” என்ற பேரால் நம் வடமாகாண மக்கள் இலங்கை மின்சார சபையின் வாசலுக்குச் சென்று ஏமாற்றத்துடன் வீடேகினர்.

இப்போது இலங்கை முழுமையிலும் சூரிய மின்கலங்களை நிறுவுவதை நோக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து இரவு நேரத்தில் அதனை பயன்படுத்துவதற்கான கட்டமைப்பிற் குரியசாதனங்களை வடக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது.

உண்மையில் இந்த நாட்டின் வறண்ட பிரதேசமான வடமாகாணத்தில் சூரிய மின்கலத் தின் மூலமான மின் உற்பத்தியை ஊக்குவிப்ப தென்பது அபிவிருத்தியை நோக்கிய அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் அநுரவின் அரசாங்கத்தில் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சூரிய மின்கல சேமிப்பு சாதனங்கள் மூலம் எங்கள் வடமாகாண மக்கள் பரந்தளவில் நன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டென நம்பலாம்.

எதுவாயினும் இது விடயத்தில் எங்கள் இலங்கை மின்சார சபையின் வட மாகாண பிராந்திய அலுவலகம் உரிய தெரிவுபடுத்தல்களை, அறிவுறுத்தல்களை – விளக்கங் களை வழங்கி பொதுமக்களை வழிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link