Type to search

Headlines News World News

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – 3 பேர் பலி!

Share

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை நேற்று (08) காலை வெடித்ததில் மலையேறுபவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிமலைப் பகுதிக்குள் நுழைவதற்கும் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூரைச் சேர்ந்த 09 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பலரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிமலை வெடித்தவுடன் சுமார் 10 கிலோமீற்றர் உயரத்திற்கு வானத்தை நோக்கி சாம்பல் படலம் சீறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் எரிமலைகளில் ஒன்றான டுகோனோ, மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link