Type to search

Headlines Local News News

நீண்ட காலத்தின் பின் வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு அஞ்சல் சேவைகள்

Share

வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த பல வருடங்களாக வவுனியா அஞ்சல் திணைக்களத்தில் போதிய வாகன வசதிகள் இல்லாமையினால், அஞ்சல் பொதிகள் மற்றும் கடிதங்களை வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு கொண்டு செல்வதற்கு அரச பேருந்துகள் (இ.போ.ச) பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது திணைக்கள வாகனத்தைப் பயன்படுத்துவது சிக்கனமானது எனக் கண்டறியப்பட்டுள்ளதுள்ளதுடன் பேருந்து நேரங்களுக்காகக் காத்திருக்காமல், அஞ்சல் சேவைகளை உரிய நேரத்தில் துரிதமாக வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை வவுனியா அஞ்சல் திணைக்கள வளாகத்தில் திணைக்கள இலச்சினை பொறிக்கப்பட்ட வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிய தனது சேவையை ஆரம்பித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link