ஆதிவாசிகளின் தலைவர் மரணம்
Share
இலங்கை ஆதிவாசிகளின் தற்போதய தலைவராக கருத்தப்படும் வன்னில எத்தோ (வயது-62) நேற்று மரணமடைந்தார்.
தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற இயற் பெயரை கொண்ட அவர், பொதுவாக வன்னில எத்தோ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
காசநோயின் காரணமாக அவர் வெலிசரே காசநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.


