Type to search

Headlines Local News News

அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சை; மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு

Share

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் நடைபெறவிருந்த குறித்த பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

புதிய பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பரீட்சைக்கு தயாராகியிருந்த விண்ணப்பதாரர்கள் புதிய அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link