கேள்வி பதில்…….
Share
எமது தலை முறையினர் முந்திய தலைமுறையிலும் பார்க்க அடிக்கடி நோய் வாய்ப்பட காரணம் என்ன?
இதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். இயற்கையின் கூர்பியல் தத்துவத்தின் படி இயற்கையின் தாக்கங்களிற்கு தாக்குப் பிடிக்கக் கூடிய உடல் வலிமையுள்ள உயிரினங்களே தப்பிப் பிழைத்து வாழும். மற் ;றவை தமது வாழ்க்கையின் ஆரம்ப பகுதியிலேயே இறந்து விடும்.
முன்னைய காலத்திலே மருத்துவவசதிகள் போதாமை காரணத்தால் உடல் வலிமை குறைந்த குழந்தைகள் சிறு வயதிலேயே இறப்பைச் சந்தித் தன. இவற்றிலிருந்து தப்பிப் பிழைத்த வலிமையான குழந் தைகள் ஆரோக்கியமாக நீண் டகாலம் வாழ்ந்தன. இவர்க ளையே நாம் அன்று சந்தித் தோம். ஆனால் தற்பொழுது மருத்துவ வசதிகள் முன்னேற் றம் கண்டிருப்பதால் ஆரோக் கியம் குறைவாக இருக்கும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ அனைவரும் காப்பாற்றப்படு கிறார்கள்.
இதனால் இவர்கள் அடிக் கடி நோய்வாய்ப்படுவது இயற் கையே. அத்துடன் தற்போதைய சந்ததியினரின் ஆரோக்கிய மற்ற உணவுமுறையும் போதிய உடற்பயிற்சியின்மையும் கூட எமது சந்ததியினர் அடிக்கடி நோய்வாய்ப்பட காரணமாக அமைகிறது. எமது சந்ததியினர் உடலில் தோன்றும் இயற்கை யான தாமாகவே மாறக்கூடிய அறிகுறிகளைக் கூட பெரிது படுத்தி நோயென்று கருதி மருந்து எடுக்க முற்படுகின்றனர். இதுவும் நோய் நிலைகள் அதிக ரித்திருப்பது போன்ற ஒரு தோற் றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.
நான் 73 வயதுடைய பெண். நான்கு வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் ஓரளவு வலி ஏற் பட்ட போது மருத்துவப் பரி சோதனை செய்து கொண் டேன். இதயத்தில் ஒரு பகுதி தடித்துள்ளதாகவும் ஒரு silent attack ஏற்பட்டுள்ள தாகவும் அத்துடன் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளதாகவும் கூறி மருந் துகள் தந்தனர். அந்த மருந் துகள் வாழ்நாள் பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என் றும் அறிவுறுத்தப்பட்டது. மருந்துகள் atenolol 50mg.atovastain 10mg.ecos prin 75 mg. கடந்த நான்கு வருடங்களா கத் தினமும் இவற்றைப் பாவித்து வருகிறேன். இடைக் கிடை தனியார் வைத்தியசா லையில் பரிசோதித்தபோது எல்லாம் normal என்று கூறினார்கள். நான் உண் ணும் உணவில் உப்பு, கொழு ப்பு குறைத்து காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட்டு சுகமாக இருக்கிறேன். தொட ர்ந்தும் இந்த மருந்துகளைப் பாவிக்க வேண்டுமா? அல் லது நிறுத்தலாமா?
உங்களுக்கு உயர் குருதிய முக்கம், இருதயத்திற் கான இரத் தக் குழாய்களில் கொலஸ்ரோல் படிவு மற்றும் இரத்தத்தில் அதி கரித்த கொலஸ்ரோல் ஆகிய நோய் நிலைகள் இருப்பதை உங்கள் கடிதத்தின் மூலம் அறிய முடிகின்றது. நீண்ட காலமாக மருத்துவத்துறையில் மேற் கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள், நீங்கள் தொடர்ந்தும்aspirin (ecopirin) atorvastatin மற்றும் atenolol ஆகிய மருந்து களை உள்ளெடுப்பது உங்க ளுக்கு எதிர்காலத்தில் இந் நோய் களால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்கும் என்பதை நிரூபித்து இருக்கின்றன.
இவை உங்களுக்கு மீண்டும் ஒரு மாரடைப்பு மற்றும் பாரிச வாதம் போன்ற இரத்தக் குழாய் களில் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். இது உங்கள் ஆயுட் காலத்தை அதிகரிக்கும். நீங்கள் உள்ளெடுக்கும்clopidogrel என்னும் மருந்தை வைத்திய ருடன் கலந்தாலோசித்த பின் நிறுத்த முடியும்.
சீனிக்குப் பதிலாக பாவிக் கப்படும் இனிப் பூட்டிகள் பாது காப்பானவையா?
இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்த பொழு தும், இவற்றுக்கு குருதிகுளுக் கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ அல்லது உடல் நிறையை அதிகரிக்கும் தன் மையோ இல்லை. அத்துடன் இவற்றுக்கு இரத்தத்திலே, அல் லது உடலிலோ கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை கூட இல்லை. சீனி, சர்க்கரை போன்ற இனிப்பு வகைகளைப் பாவித்தால் பற்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது அனை வருக்கும் தெரியும். அத்தகைய பாதிப்புகள் செயற்கை வகையான இந்த இனிப் பூட்டிகள் பாவிப்பதால் ஏற்பட மாட்டாது.
இந்த இனிப் பூட்டிகளின் பாவ னையால் ஏதாவது ஆபத்து நிக ழுமா? அல்லது உடற் பாதிப் புகள் ஏற்படுமா? என்பது சம்பந் தமாக செய்யப்பட்ட ஆராய்ச் சிகள் அளவுடன் இவற்றை பாவிப்பது பாதுகாப்பானது என் பதை உறுதி செய்திருக்கின் றன. அள வுக்கு அதிகமாக எந்த உணவையும் உண்பது பாது காப்பானதல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் .
பாயாசம், தேநீர், ஐஸ்கிறீம் வகைகள் மோதகம் போன்ற வற்றுக்கும் இந்த இனிப்பூட் டிகளைப் பாவிக்க முடியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டு மல்ல குடும்பத்தில் எந்த நோய் உள்ளவர்களும் அதி கரித்த நிறை உள்ளவர்களும் நிறை அதிகரிப்பை தடுக்க விரும்புவர்களும் சீனி, சர்க்கரைக்கு பதிலாக இந்த இனிப் பூட்டிகளைப் பாவிப்பது பாதுகாப்பானது.
பயிரிடப்படும் ஒவ்வொரு புகையிலைச் செடியும் யாரோ ஒரு மனிதனை நோயாளி யாக்கு மல்லவா?
கஞ்சாச் செடி வளர்ப்பது தண்டனைக் குரிய குற்றம் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பல இலட்சம் மக்களைப் பாதித்து நிற்கும் புகையிலைச் செடியை வளர்ப் பது தண்டனைக்குரிய குற்ற மாகக் கருதப்படுவதில்லை.
பயிரிடப்படும் ஒவ்வொரு புகையிலைச் செடியும் யாரோ ஒரு மனிதனை நோயாளியாக் கும். இதே விளை நிலத்தில் ஒரு மரக்கறியைப் பயிரிட்டால் அது யாரோ ஒரு மனிதனை வாழவைக்கும்.