சமயக் கருத்துக்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் விஞ்ஞானமயப்படுத்தப்படுவது……
Share
ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள, சமூக, ஆன்மிக, சுற்றாடல் நன்னிலையும் சேர்ந்த ஒரு உன் னத நிலையே உண்மையான சுகம் என்று பல உலக சுகாதார விற்பன்னர்கள் முடிவு செய்தி ருக்கிறார்கள்.
மத ஆன்மிக நம்பிக்கை மனி தனை பூரணப்படுத்துவதற்கு உறு துணையாக இருப்பதுடன் மதமும் மருத்துவமும் மனிதனின் சுகாதார மேம்பாட்டிற்கான இரண்டு கண் களாகவும் இருக்கின்றன.
இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவங்கள் கி.மு.3500 வருடங் களுக்கு முன் சிந்துவெளிப் பிரதே சத்திலே தோற்றம் பெற்றிருந்ததாக புதைபொருள் ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன. ஆனால் தற்போது அறியப்படாமல் இருக்கும் வேறு சில மதங்களின் அடிப்படைக் கருத் துக்கள் அதற்கு முன்னதாகவே தோற்றம் பெற்றிருக்கக் கூடும்.
அக்காலப் பகுதியில் மருத்துவப் பொருட்கள், அறுவை மருத்துவம், நோய்த் தடுப்பு முறைகள் ஆகி யவை அக்கால மக்களால் அறியப் பட்டிருந்தன என்பதற்கான வர லாற்று சான்றுகள் பல கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
சிந்துவெளிப் பிரதேசத்தில் தோற்றம் பெற்ற இந்து மதக்கருத் துக்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு அது இந்துமதமாகத் தோற்றம் பெற்றது கி.மு.1500 வருடங்களுக்கு முற் பட்ட காலப் பகுதி என்று கருதப்படு கிறது. இதனை வேதகாலம் என்று சொல்வார்கள். இந்த வேத காலத் திலே மதப் பெரியவர்கள் மருத் துவத் தொண்டையும் ஆன்மிகத் தொண்டையும் ஒருங்கே ஆற்றி வந்ததற்கான சான்றுகள் தென்படு கின்றன.
பல கிறிஸ்தவமத நிறுவனங் களும் இந்துமத நிறுவனங்களும் மருத்துவச் சேவைக்குப் பெரும் பங் காற்றி வருகின்றன. உள வளத் துணைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் ஆற்றுப்படுத்துகைக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் ஆற்றி வரும் பங்கு அளப் பரியது. பல மதம் சர்ந்த அமைப்பு கள் மருத்துவமனைகளையே வழி நடத்தி வருகின்றன.
திராவிடர்களின் மருத்துவ முறை யாக வளர்ச்சி பெற்ற சித்த மருத்து வத்தின் தத்துவங்கள் ஆரம்பத்திலே சிவனினால் சக்தியிடம் கையளிக் கப்பட்டு சக்தி அதனை நந்தியிடம் கொடுத்து நந்தி அதனை சித்தர் களிடம் சேர்ப்பித்தார் என்று பண் டைய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தத்துவங்கள் ஆரம்பத்திலே 18 சித்தர்களினால் கையாளப்பட் டிருக்கின்றன.
இந்த சித்தர்களிலே முக்கியமான வராக அகத்தியர் இருந்திருக்கிறார். இந்த அகத்தியரின் தலைமையி லேயே சித்த மருத்துவம் முழுமை யாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்களை நம்புகிறோமோ என்பது முக்கியமல்ல. ஆனால் அக் காலத்திலிருந்தே மதமும் மருத்துவ மும் ஒருங்கிணைந்து செயற்பட்டி ருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கு கிறது.
இந்த அண்ட சராசரங்கள் அனைத் தினதும் இயக்கத்திற்கு அடிப்படை யாக இருப்பது Energy என்று சொல்லப்படுகின்ற சக்தி என்பது உலகறிந்த உண்மை. சக்தி இன்றி எதுவும் இயங்க முடியாது. அந்த சக்தி தான் சிவனின் சரிபாதி என்றும் அவள் தான் அனைத்தையும் இயக் கிக் கொண்டிருக்கிறாள் என்றும் இந்துமதம் சொல்கிறது. இந்த உடல் இயக்கமும் சக்தியும் தான் மருத்து வத்திற்கு அடிப்படையாக விளங்கு கிறது.
தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து கோயிலுக்குச் சென்று கோயிலை 3 தடவை வலம் வந்து ஆசனங்கள், அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து இறை வணக்கம் செய்ய வேண்டும் என்று இந்துமதம் சொல்கிறது. இங்கே உடைச் சுத்தம், உடல் சுத்தம், உடற் பயிற்சி, மன அமைதி என்ற நான்கு சுகாதார அறிவுரைகள் அடங்கி இருக்கின்றன.
பஞ்சமா பாதங்களை தவிர்க்கு மாறு மதங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றன. இந்த பஞ்சமா பாதங்களில் அடங்கியிருக் கும் கள், காமம் எனப்படுகின்ற மது அருந்துதல் தகாத பாலியல் தொடர் புகள் என்பவற்றை தவிர்த்து விடுவ தன் மூலம் யுஐனுளு போன்ற பல கொடிய தொற்று நோய்களிலிருந்தும் ஈரல், நரம்புகள், சம்பந்தமான நோய்களிலிருந்தும் எம்மை தற் காத்துக் கொள்ள முடியும். விரத காலங்களிலே மாப்பொருள் தவிர் த்து பால், பழங்கள், உண்ணும் மரபு அன்றிலிருந்து கடைப்பிடிக் கப்பட்டு வந்திருக்கின்றது.
பால், பழங்களிலே வினைத் திறன் கூடிய புரதங்களும் விற்ற மின்களும் கனியுப்புக்களும் நார்ப் பொருள்களும் இருப்பதுடன் இது உடல் நிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஒரு நிறை உணவாகவும் விளங்குகிறது.
சூரிய நமஸ்காரம் எமது வழி பாட்டு முறைகளில் முக்கியமானது. இது காலையில் சூரிய ஒளியிலிரு ந்து சூரியனை நோக்கி நமஸ்காரம் செய்யும் ஒரு முறையாகும். இத னையே மேலைத்தேச நாடுகளிலே மருத்துவத் தேவைகளுக்காக சன் பாத் என்று செய்து வருகின்றார்கள். இதன்மூலம் பல எலும்பு, பல் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்.
வேத காலத்திலே தோன்றிய அதர்வண வேதத்தின் உப வேதங் களில் ஒன்றாக ஆயுர்வேத மருத்து வம் கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ள இந்த மருத்துவத்தில் நோய்களைக் குண மாக்கும் பல மார்க்கங்கள் குறிப் பிடப்படிருக்கின்றன. சிலப்பதிகாரத் திலே இளங்கோவடிகள் தமிழ் மருத்துவர்களை ஆயுர்வேதர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பண்டைய யுத்தங்களிலே காய முற்றோருக்கு பல சத்திர சிகிச்சை கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங் கள் கிடைத்திருக்கின்றன. இதற்கு அவர்கள் செப்பு கத்திகளை பயன் படுத்தி இருக்கின்றார்கள். இரும்புக் கத்திகளை பாவித்தால் துருப்பிடித்து அதிலே ஏற்பு வலி போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வளரும் ஆபத்து அதிகமாகக் காணப் பட்டதால் தொற்று நீக்கும் வசதிக ளற்ற அந்தக் காலத்திலே புத்தி சாதுரியமாக பாதுகாப்பான செப்புக் கத்திகளை அந்தச் சித்தர்கள் பாவித்திருக்கிறார்கள்.
இன்று உலகம் முழுவதும் பிர பல்யம் அடைந்துவரும் யோகாசனப் பயிற்சி முறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் சைவ சித்தர்களே. இன்றும் இந்த யோகாசனப் பயிற்சி முறை பல தொற்று நோய்களின் கட்டுப்பாட் டிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
மனிதனை இறைவன் பகுத்த றிவுடன் படைத்திருக்கிறான். எனவே மதக் கருத்துகளும் மனிதனின் பகுத் தறிவால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இருந்தால் மட்டுமே அவை மனிதனை வழிநடத்தும். எனவே மதக் கருத்துக்களும் விஞ்ஞான மயப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு தேவை எழுந்திருக்கின்றது.
சிந்துவெளியிலே இருந்த வழி பாட்டு முறைகளுக்கும் வேதகா லத்து வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உபநிடத காலத் திலே சமயக் கருத்துக்கள் மீள ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.
சங்க காலத்திலே மதக் கருத் துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு பல விடயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே காலத்திற்குக் காலம் காலத்திற்கு ஏற்றாற்போல மீளாய்வு செய்யப் பட்டு வரும் சமயக் கருத்துக்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் மீளாய்வு செய்யப்பட்டு விஞ்ஞான மயப்படுத்தப்படுவது தவறான செயலாகாது.
Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.