கொரோனா வந்துற்ற போதும் இனக் கொடூரம் தீரவில்லை!
Share
விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உட லைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். பட்டது பட்டு எந்நேரமும் பட்டு சிவனை ஏற்றுங் கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம் என்றார் பட்டினத்தடிகள்.
மனித வாழ்வின் நிலையாமை பற்றி எடுத் துக் கூறியவர்களில் பட்டினத்தடிகளுக்கு நிகர் எவருமில்லை எனலாம்.
மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்தி இந்தப் பிறப்பின் தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவரின் உப தேசம்.
அதாவது மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் எதுவும் கிடையாது.
இனம், மதம், மொழி என்ற பாகுபாட்டால் மனித சமூகம் பிரிந்து நின்று தர்க்கிப்பதில் எந்த நியாயமும் இல்லை.
முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து போவது தான் இயற்கை எழுதிய நியதி. இதுவே உண்மை.
ஆம், 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதி காரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இப் போது இந்த மண்ணில் இல்லை.
தன் பதவிக்காக அவர் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் இன்று அவரது ஐக் கிய தேசியக் கட்சியை நிர்மூலமாக்கி விட்டுள்ளது.
ஆக, நேற்று இருந்தவர் இன்றில்லை என்பதுதான் இயற்கை. இதனை இந்த உல கம் உணரத்தவறி, அண்டசராசரம் முழுவதையும் தம்மால் ஆட்டிப்படைக்க முடியும் என்ற கர்வம் மானிட குலத்தில் எழுந்தபோது,
இல்லை. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் நானே! என்பதை இறைவன் நிரூபிக்க விளைந் தான்.
அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், புதிய கண்டுபிடிப்பு, அணுவாயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், போர் விமானங்கள் என அனைத்தையும் கண்டு பிடித்த கர்வத்தில் இருந்த இந்த உலகை ஒரு கணப்பொழுதில் முடக்கிய பெருமை கொரோ னாவுக்கு உண்டு.
பரம ஏழைக்கும் அமெரிக்க ஜனாதிபதிக் கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டதெனில் இந்த உலகில் உயர்ந்தவர், தாழ்ந்தவர்; ஆட்சி செய்பவர், ஆளப்படுபவர் என்று எந்தப் பேத மையும் கிடையாது என்பதை இந்த மானிட சமூகத்துக்கு இறைவன் உணர்த்தி நிற்கிறான்.
எனினும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள எவரும் இல்லை.
ஏறிய மமதை இன்னமும் இறங்கிய பாடில்லை. இதோ! தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்பதிலும் மாவீரர் வாரத்தில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் ஒரு தரப்பு விழிப்பாக இருக்கின்ற தெனில், இன்னமும் திருத்தம் ஏற்பட்டதாக இல்லை என்பதுதானே உண்மை.