சுகாதார விதிமுறைகளை மீறுவோரை உடன் கைது செய்ய நடவடிக்கை
Share
சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பாரியளவில் கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாகக் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவரைபு திணைக்களத்திலிருந்து சட்டமூலம் கிடைத்தவுடன் இரு நாட்களுக்குள் அதனை வர்த்தமானியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள்.
கைது செய்யப்படுவோருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.