நாள்தோறும் 200 பேருடன் உரையாடும் பிரதமர் மோடி
Share
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
மாநில ஆளுநர்கள், முதலமைச்சர், மாநில சுகாதார அமைச்சர்கள் ஆகியோருடன் அவர் உரையாடி வருகிறார்.
வைத்தியர்கள், தாதிகள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருடனும் பேசி, அவர்களது சேவையையும் பாராட்டி வருவதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஆகியோருடனும் பேசி வருகிறார்.
அத்துடன், நாள்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும், அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் தனித் தனியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கேட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்தது.