சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து டோனி
Share
பெங்களுர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து பட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கப்டன் டோனி கடுமையாகப் பாய்ந்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெங்களுரிடம் வீழ்ந்து 5 ஆவது தோல்வியை தழுவியது.
சென்னை அணிக்கு இது மிகுந்த நெருக்கடியாகும். பெங்களுர் அணியிடம் இவ்வளவு மோசமாக இதுவரை தோற்றது கிடையாது.
இந்த தோல்வியால் பட்ஸ் மேன்கள் மீது மீண்டும் கப்டன் டோனி கடுமையாக பாய்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடைசி 4 ஓவர்களில் நாங்கள் கட்டுக்கோப்பாக சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். அதை செய்யத் தவறி விட்டோம். பட்டிங்கை பொறுத்த வரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது.
தற்போது அது வெளிப்படை யாக தெரிந்து விட்டது. அதை சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியமாகும்.
பட்டிங்கில் மிகப் பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும்.
இந்தப் போட்டியில் 6 ஆவது ஓவரில் இருந்தே பட்டிங்கில் சக்தி இழந்து விட்டதாகவே நினைக்கிறேன். சரியான திட்டத்துடன் பட்ஸ்மேன்கள் களம் இறங்கவில்லை.
பந்து வீச்சில் எதிர் அணியை கட்டுப்படுத்தினோம். ஆனால் கடைசி 4 ஓவர்களில் நாங்கள் தவறு செய்து விட்டோம்.
எங்களின் மிகப்பெரிய கவலை பட்டிங்தான். அடுத்து வரும் போட்டியில் பட்டிங்கை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்போம் என டோனி கூறினார்.