கொரோனாவால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கை வீரர்கள்
Share
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அதிகாரிகள் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டியை நட த்துவதற்காக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகானாமா பாகிஸ்தானின் லாகூரில் இருக்கிறார், ஆனால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் கொரோனா அறிகுறிகளைக் காட்டியதாக தகவல்கள் வெளி வந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பல போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடந்தது.
விமான நிலையம் மூடப்பட்டதால் மகானாமா இலங்கை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது, ஆனால், தான் லாகூரில் இருந்து கராச்சிக்குச் செல்ல முடிந்தால் செவ்வாய்க்கிழமை மாலை அந்நகரத்திலிருந்து புறப்படும் இலங்கை விமானத்தில் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
அதே சமயம், 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க தென்னாபிரிக்கா சென்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
போட்டி இரத்து செய்யப்பட்ட பின்னர் திங்களன்று தென்னாபிரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சில வீரர்கள் மட்டும் நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று புறப்படும் விமானத்தில் பயணிக்க விருந்த மற்ற வீரர்கள் தென்னாபிரிக்காவில் சிக்கி தவிக்கிறார்கள்.
தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மோகன் டி சில்வாவும் நாடு திரும்ப சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.