கொரோனா வைரஸூக்கு நியூயோர்க்கில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் உயிரிழப்பு
Share
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸிக்கு 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்; எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கி வருகிறது.
இதே வேளை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.
நியூயோர்க் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா வைரஸிக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை நெருங்கி வருகிறது.
நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில் வேனியா ஆகிய மாகாணங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன.
நியூயோர்க் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 630 பேர் பலியாகினர். நாள் தோறும் இதே அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சராசரியாக 2 நிமிடத்து க்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருகின்றனர்.
இன்னும் 7 நாட்களில் நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, உச்சத்தை எட்டும் என்று அம்மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்தார்.
நியூயோர்க் மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், கவசஉடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள் ளன. இவற்றை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க முடியாதது ஏமாற்றமளிப்பதாகவுள்ளது.
இந்தப் பொருட்களை சீனா விலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பது வேதனை யாகவுள்ளது.
நியூயோர்க் மாகாணம் கோரிக்கை விடுத்த 17 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் போதுமானவை அல்ல.
சீனா நன்கொடையாக அளித்த ஆயிரம் செயற்கை சுவாசகருவிகள் வந்து சேரவுள்ளன.
இதற்காக சீன அரசுக்கும், அலிபாபா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டம் பெறத் தயாராக இருக்கும் மருத்துவ மாணவர்களை மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.