ஊரடங்கால் ஒழிக்க முடியுமா கொரோனாவை? சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டு
Share
கொரோனா வைரஸை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீடுகளுக்குள் முடக்குவது மாத்திரமே உரிய பலன் தராது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது.
மனித குலத்திற்கு பெரும் சவா லாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் இது வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட உயிர்களை பலி வாங்கியது.
மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவ தால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளி லேயே முடக்கப்பட்டனர்.
பொது மக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறி வுறுத்தியது.
இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மாத்திரமே உரிய பலன் தராது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்; டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் தெரிவிக் கையில்,
கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு களைப் பிறப்பித்துள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக் களை வீட்டுக்குள் இருக்க சொல் வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், கொரோனா வைரஸை அழிக்க இந்த நடவடிக்கை மாத்திரமே போதுமானதல்ல.
கொரோனா வைரஸை ஒழிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். சுகா தாரப் பணியாளர்கள், பரிசோதிக் கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
தனிமைப்படுத் தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட் டோரிடமிருந்து யாருக்கு நோய் பரவி வருகிறது என்பதைக் கண்ட றிய தெளிவான திட்டம் தேவை என அவர் மேலும் தெரிவித் தார்.