4 வயது சிறுவன் லண்டன் விபத்தில் உயிரிழப்பு
Share

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த 4 வயதுச் சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.
குறித்த சம்பவத்தில் வவுனியா பால மோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் என்ற சிறுவனே மரணமடைந்துள்ளான்.