19 மாவட்டங்களில் ஊரடங்கு இன்று தளர்வு
Share
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடர் வலயங்களை தவிர 19 மாவட்டங்களில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் செயலகம் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.