வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான சலுகைகளை பெறும் காலம் மே 15 வரை நீடிப்பு
Share
வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 5 லட்சம் ரூபாயுக்கு உட்பட்ட காசோலைகளின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கு மான சலுகைக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது
என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,
கோவிட் – 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட சலுகைகளைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூல தனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டி யுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது.
மேலும், ரூ.500,000 இற்கு உள்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லு படிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடி யாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள் ளப்படுகின்றன.
இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28 ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
தகுதியான வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தேவையான தகவல்கள்{ ஆவணங்களுடன் தங்களுடைய வங்கிகளை முடிவுத் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த சலுகையானது தகுதியுடைய கடன் களின் ஏற்கெனவே இருக்கின்ற கடனுக்குரிய காலத்தினை கடனைப் பிற்போடக்கூடிய காலத்தினால் நீடித்துக் கொள்வதற்கு வங்கி களை வேண்டிக்கொள்கின்றது.
இவ்வண்ணம் நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் மேலதிகச் செலவுகள் ஏதுமில்லாமல் பிற்போடப்பட்டகடனின் தவணைப் பணத்தினை மீளச்செலுத்துவதற்கு நாங்கள் கடன் பெறுநர்களை வற்புறுத்துகின்றோம்.
எனவே, இவ்வாறாகக் கிடைக்கப்படும் நிதியினால் வங்கிகளும் அவைகளின் திரவ நிலையை பலப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றுள்ளது.