யானைகளின் தொல்லை பாதுகாப்பு வேலி அமைக்க மக்கள் கோரிக்கை
Share
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கல் மடுநகர் றங்கன்குடியிருப்பு பகுதியில் தொடரும் காட்டு யானை தொல்லையால் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் 110 குடும்பங்;கள் உள்ளன.
அவர்கள் வாழ்வாதாரத்திற்காக தோட்டப் பயிர்ச்செய்கைகளை முன்னெடுத்து வருகின் றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அரிகரித்துக் காணப் படுகின்றது.
இவ்வாறான காட்டுயானை தொல்லை காரணமாக அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
அதாவது தமது கிராமத்தில் மாலை 5மணிக்கு பின்னர் காட்டுயானைகள் ஊர் மனைக் குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் இரவு முழுவதும் விழித்திருந்து அவற்றை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதாவும் தெரிவித்துள்ளதுடன் தமது பகுதியை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.